Header Ads



ரீடா ஐசாக்கின் கவனத்தில், இலங்கை முஸ்லிம்களின் முக்கிய விவகாரங்கள்

-விடிவெள்ளி ARA.Fareel-

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு இன்று இலங்­கைக்கு வருகை தரும் சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீடா ஐசாக் நதே­யாவை முஸ்லிம் பிர­தி­நி­திகள் சந்­தித்து தமது பிரச்­சி­னை­களை முன்­வைக்­க­வுள்­ளனர்.

இன்று பிற்­பகல் 1 மணிக்கு கொழும்­பி­லுள்ள ஐ.நா. காரி­யா­ல­யத்தில் நடை­பெ­ற­வுள்ள இந்தச் சந்­திப்­பினை ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் ஏற்­பாடு செய்­துள்ளார்.

முஸ்­லிம்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளிலும் வழக்­குக­ளிலும் சட்டம் நிலை நாட்­டப்­ப­டும்­போது அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெ­று­தா­கவும் சட்டம் தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் ஐ.நா. நிபு­ணரைச் சந்­திக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அவ­ரிடம் முறை­யி­ட­வுள்­ளனர்.

அளுத்­க­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள், மும்­மானை முஸ்லிம் பாட­சா­லையின் மைதானப் பிரச்­சினை, மும்­மானை கிராம முஸ்லிம் வர்த்­த­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நட­வ­டிக்­கைகள், பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல் விவ­காரம், பொர­லெஸ்­க­முவ பள்­ளி­வாசல் விவ­காரம், மாதம்பை காணி விவ­காரம் உட்­பட முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீடா ஐசாக் நதேய்­யா­விடம் விரி­வாக விளக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் முறை­யி­டப்­ப­ட­வுள்­ளன.

பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டுதல், பள்­ளி­வாசல் கட்­டிட நிர்­மாண அனு­மதி கோரப்­ப­டும்­போது தாம­தித்தல், நிர்­மா­ணங்­களை சட்­ட­வி­ரோ­த­மா­னது எனக்­கூறி அகற்­று­மாறு உத்­த­ர­வி­டுதல் போன்ற அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்கள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

அளுத்­க­மையில் 2014 ஆம் ஆண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்டும் அந்த வன்­மு­றை­க­ளுக்கு கார­மா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டாமை என்­பன பற்­றியும் தெரி­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக RRT அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஷ் நூர்தீன் தெரி­வித்தார்.

ஒவ்வோர் பிரச்­சி­னையும் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கும் அறிக்­கை­களைச் சமர்ப்­பிப்­ப­தற்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் இன்­றைய சந்­திப்பில் கலந்து கொண்டு பிரச்­சி­னை­களை விப­ர­மாகத் தெரி­விக்­க­வுள்­ளனர்.

இன்று இலங்கை வருகை தரும் ரீடா ஐசாக் நதேயா 10 நாட்கள் இங்கு தங்­கி­யி­ருப்பார். இலங்­கையில் சமய, மொழி மற்றும் இன அடிப்­ப­டை­யி­லான சிறு­பான்மை இனங்­களின் தற்­போ­தைய நிலையைக் கண்­ட­றி­வதே இவ­ரது விஜ­யத்தின் நோக்­க­மாகும்.

இவர் இங்கு தங்­கி­யி­ருக்கும் நாட்­களில் கொழும்பு உட்­பட வடக்கு வட மத்­திய கிழக்கு மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் பல்­வேறு இடங்­களில் வசிக்கும் சிறு­பான்மை இனத்­த­வர்­களை நேர­டி­யாகச் சந்­தித்து அவர்­க­ளது குறை­க­ளையும் முறைப்­பா­டு­க­ளையும் கேட்­ட­றி­ய­வுள்ளார். அத்­துடன் அரச அதி­கா­ரிகள், தேசிய மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரிகள் மற்றும் சிவில் சமூக ஆர்­வ­லர்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார்.

கடந்த ஆண்டு புதிய அரசு பத­வி­யேற்­றது முதல் அடைந்­துள்ள குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றங்ளைப் பாராட்டும் அதே­வே­ளையில் இந்­நாட்டில் வாழும் பல்­வே­று­பட்ட சமூ­கங்­க­ளிடையே புரிந்­து­ணர்வு அமைதி, ஒற்­றுமை மற்றும் வேற்­றுமை பாராட்­டாமை போன்ற விட­யங்­களில் பாரிய சவால்­களைச் சந்­திக்க வேண்­டி­யுள்ள நிலை­யுள்­ள­யினை மறக்க முடி­யாது என்று நதேயா கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

தனது அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்வதனூடாக மேற்படி சவால்களை இனங்காணவும், அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இலங்கை அரசிற்கு மற்றும் சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே தனது விஜயத்தின் நோக்கம் என்று அவர் தெளிவுபுடுத்தியுள்ளார்.

எதிர்வரும் 2017 மார்ச் மாதத்தில் இலங்கை விஜயம் தொடர்பான தனது பூரண அறிக்கையை அவர் ஐ.நா. அமைப்பின் மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.