Header Ads



பாராளுமன்றத்தில் பொய் சொன்ன, பிரதமர் ரணில்

ஊடகங்கள் தவறான வதந்திகளை மக்களிடையே பரப்புவதனை நிறுத்திக்கொள்ளவேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் இருவர், உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் முறைகேடாக பயணம் செய்ததாக குற்றச்சாட்டுகள் பல ஊடகங்களில் அண்மையில் பரவிவந்தது.

குறித்த விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.

மேலும் நாட்டில் ஊடகங்கள் உண்மைத்தன்மை அற்ற செய்திகளையும் வதந்திகளையும் மக்களிடையே பரப்பி வருகின்றது இவை நிறுத்தப்படவேண்டும்.

விமான படைக்கு சொந்தமான விமானங்களில் முறைகேடாக பயணம் செய்தமை தொடர்பில் கூறப்பட்ட கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வதந்திகளே எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,

“குறித்த விடயம் வதந்தியாக தெரியவில்லை, அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்ற கருத்துகளை முன்வைக்கும் போது அவருடைய கருத்துகள் நகைச்சுவையாக பிரதமரால் மாற்றப்பட்டது தொடர்ந்து அவரின் ஒலிவாங்கி சபாநாயகரால் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முறைகேடான விமானப்பயணம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டவர்கள் பிரதமர் ரணிலுக்கு வேண்டப்பட்டவர்களே என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கதாகும்.

2

வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரின் போக்குவரத்து தேவைக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை இலவசமாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10 திகதி முதல் 2016ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி வரையில் இவ்வாறு விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு நேற்று -06-10-2016 பாராளுமன்றத்தில் வௌியிடப்பட்ட பட்டியலை மேலே காணலாம். 


2 comments:

  1. இங்கிலாந்து இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தது தான் பெரும் தவறு அதோடு சுதந்திரத்துக்கு சண்டைபிடித்தவங்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும்.சுதந்திரம் கிடைத்தபின்பு நாட்டுக்கு என்ன நலம் கிடைத்தன ஒரே சண்டையும் பிரச்சினையும் தான் போதாததுக்கு 30 வருடம் சண்டை ஒரு உருப்படி அபிவிருத்தி காணோம்.

    இலங்கையின் பாராளுமன்ற மந்திரிமார்களின் வயது எல்லை 65 ஆக இருந்தால் நல்லது அதுக்கு மேல கட்டாயம் ஓய்வு பெறவெண்டும் என்னும் சட்டம் கொண்று வர வெண்டும்.இந்த ரணில் எல்லாம் ஓய்வு பேருற வயசு இன்னும் பாராளுமன்றத்தில் இருந்து ஒன்றும் உரு படியா செய்ற இல்லை பொறுப்புகள்.

    ReplyDelete
  2. Ranil must be undergone for a rigorous investigation by the bribe commission.

    ReplyDelete

Powered by Blogger.