Header Ads



"நசீர் அஹ்மட் விவகாரம்" மைத்திரி முடிவெடுக்கும்வரை, யாரும் வாய்திறக்காதீர்கள் - ரணில் உத்தரவு


சம்பூரில் நடந்த சர்ச்கைக்குரிய நிகழ்வு தொடர்பாக, மைத்திரிபால சிறிசேன முடிவெடுக்கும் வரை, அதுபற்றி எந்தக் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.

சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடுமையாகத் திட்டிய விவகாரம் தொடர்பாக, பிரதமர், கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார்.

அதேவேளை, கடற்படை ஏற்கனவே இதுபற்றிய அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமரிடம் கையளித்துள்ளது.

தற்போது ஜி7 மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், கடற்படையினதும், கிழக்கு மாகாண முதலமைச்சரினதும் அறிக்கைகளை, மைத்திரிபாலடம் பிரதமர் கையளிக்கவுள்ளார்.

இந்த நிலையிலேயே, சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன  பொருத்தமான முடிவு ஒன்றை எடுக்கும் வரை, இது தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு, கடற்படையையும், கிழக்கு முதல்வரையும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விடயத்தில் இறுதி முடிவு மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே எடுக்கப்படும் என்றும் அவர் இரண்டு தரப்பினரிடமும் தெரிவித்துள்ளார்.

 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவிடம், இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை நடத்தியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. Treat A Chief Minister Respectful way infront of Public.
    Treat An Office Respectfully even if committed mistake, which can be solved offically
    Do not get emotional to matters that will lead path to RACIST who is wathing situation with egle eyes and fox brain to creat problme to the country and people.

    A function at an instituion.. who is more authorised to conduct should also be followed and Do not take authority of another institution without consulting them.

    Hope good for the SWEETLAND

    ReplyDelete
  2. Well said dear prime minister

    ReplyDelete

Powered by Blogger.