Header Ads



"வெள்­ளம் பாதித்த நாள், சாப்­பிட உணவில்லை, பள்­ளி­வா­சல்­ சென்றே சாப்­பிட்டேன்" ஞான­லோக தேரர்


வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட முதலாம் நாள் எனக்கு சாப்­பிட உணவு இருக்­க­வில்லை. நான் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்றே உணவு சாப்­பிட்டேன்

பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் எமக்­கு­மி­டையில் இவ்­வா­றான ஒரு நல்­லு­றவு இருக்­கி­றது என அம்­பன்­வெல ஞான­லோக தேரர் தெரி­வித்தார்.

கொலன்­னாவை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற வெள்ள நிவா­ரண பணிகள் தொடர்­பான ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, 

வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள கொலன்­னாவை மக்­க­ளுக்கு நிவா­ரண உத­விகள் பெரி­ய­ளவில் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

இதே­வேளை கொலன்­னா­வையைப் பார்ப்­ப­தற்குத் தினமும் நிறைய மக்கள் வரு­கி­றார்கள். பாதாள உலக கோஷ்­டி­யி­னரின் நட­மாட்­டமும் அதி­க­ரித்­துள்­ளது. இதனை ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்த வேண்டும். 

மக்கள் ஒற்­று­மை­யாக சகோ­தர பாசத்­துடன் வாழ முற்­பட்­டாலும் ஊட­கங்­களே இன­வா­தத்தைப் பரப்­பு­கின்­றன. சிறிய சம்­ப­வங்­களை பெரி­து­ப­டுத்­து­கின்­றன. பிரேக்கிங் நியூஸ் என்று இன­வாதம் ஏற்­படும் செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன. குறிப்­பாக தனியார் ஊட­கங்­களே மக்­களின் ஒற்­று­மையைச் சீர­ழிக்­கின்­றன.

ஆனால் பெரும்­பான்மை மக்­களும் முஸ்­லிம்­களும் மிகவும் ஒற்­று­மை­யுடன் வாழ்­கி­றார்கள். அவர்­க­ளுக்குள் முரண்­பா­டுகள் இல்லை. பள்­ளி­வா­சல்­க­ளுடன் எமக்குத் தொடர்­புகள் இருக்­கின்­றன.

நேற்றும் நாம் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து நிவா­ரணப் பொருட்­களைப் பெற்றுச் சென்றோம். ஊட­கங்கள் இன நல்­லு­றவைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக பணி­யாற்ற வேண்டும் என்றார்.

ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் நிவாரண உதவிகள் பெரும்பான்மை சமூகத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என வினவியதையடுத்தே ஞானலோக தேரர் ஊடகங்களை விமர்சித்தார்.

1 comment:

  1. Masha Allah. Good to hear stories like this. These incidents build friendships between Muslims and the singhalese and it is welcome. On the other hand racists make use of incidents like with the CM and the navy officers to create issues. So we have to be very careful when we deal with non-Muslims. Best things is treat them well on every occasions....

    ReplyDelete

Powered by Blogger.