Header Ads



பள்­ளி­வா­சல்­கள் நிர்­மா­ணிப்பதை தடுக்க, வக்பு சட்டத்தை ரத்துச்செய் - தயா­ரத்ன தேரர்

-விடிவெள்ளி  ARA.Fareel-

நாட்டில் வக்பு சட்டம் என்று ஒன்­றி­ருப்­ப­தி­னாலே நினைத்த இடங்­க­ளி­லெல்லாம் முஸ்­லிம்கள் பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்துக் கொள்­கி­றார்கள். தெஹி­வ­ளையில் மாத்­திரம் 17 பள்­ளி­வா­சல்கள் பன்­ச­லைகள் இருக்கும் பகு­தி­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. 

எனவே வக்பு சட்­டத்தை இல்­லாமற் செய்ய வேண்டும் என சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு எதிர்ப்பு வெளி­யி­டு­வ­தற்­கான கார­ணத்தை விளக்­கு­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், 

பள்­ளி­வா­சல்கள் பன்­ச­லை­க­ளுக்கு அண்­மை­யிலும் பௌத்­தர்கள் வாழும் பிர­தே­சங்­க­ளிலும் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தாலும், விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தாலும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. அப்­பி­ர­தே­சங்­களில் வாழும் மக்கள் எதிர்ப்புத் தெரி­விக்­கி­றார்கள். பன்­ச­லை­களில் பிரித் ஓதும் போதும் பள்­ளி­வா­சல்­களில் பாங்கு சொல்லும் போதும் பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன.

பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள மக்கள் எதிர்ப்பு வெளி­யிட்டால் விஸ்­த­ரிப்பு பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாது. தெஹி­வ­ளையில் முஸ்­லிம்கள் வாழாத பகு­தி­களில் கூட பள்­ளி­வா­சல்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

முதலில் மத்­ரஸா என பதிவு செய்து கொண்டு சம­யப்­பா­ட­சா­லையை ஆரம்­பிக்கும் முஸ்­லிம்கள் அங்கு தொழு­கையை நடாத்தி சில காலத்தில் அதனை பள்­ளி­வா­ச­லாக மாற்றிக் கொள்­கி­றார்கள். சம­ய­ரீ­தி­யான சட்­டங்கள் எமது நாட்டில் அமுலில் உள்­ள­த­னாலே இவ்­வா­றான பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன.

எனவே நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க வேண்­டு­மாயின் அர­சாங்கம் சம­ய­ரீ­தி­யான சட்­டங்­களை இல்­லாமற் செய்­வது பற்றி சிந்­திக்க வேண்டும் என்றார்.

தெஹி­வளை பாத்யா வீதியில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணிக்கு அப்­ப­கு­தியைச் சேர்ந்த பெரும்­பான்மை மக்­களும் தேரர்­களும் கடும் எதிர்ப்­பினைத் தெரி­வித்து வரு­வ­துடன் பொலி­ஸிலும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் நிர்மாணப்பணிக்கான சட்டரீதியான அனுமதிப்பத்திரத்தை பொலிஸாரிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சமர்ப்பித்தும் பொலிஸார் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிக்கு தடைவிதித்துள்ளனர்.

4 comments:

  1. Masjids are shelters not only for Muslims but also for all and how they serve as shelters are practically proved in case of calamity and turmoil of people at times of natural disasters. Let him learn a lesson from Vajira Thero, the chief incumbent of Kolonnava Viagra who proclaimed to donate the first packet of cement to begin any mosque construction anywhere in Kolonnawa. May Allah enlighten his heart and bless him with Hidayath.

    ReplyDelete
  2. Masjids are shelters not only for Muslims but also for all and how they serve as shelters are practically proved in case of calamity and turmoil of people at times of natural disasters. Let him learn a lesson from Vajira Thero, the chief incumbent of Kolonnava Viagra who proclaimed to donate the first packet of cement to begin any mosque construction anywhere in Kolonnawa. May Allah enlighten his heart and bless him with Hidayath.

    ReplyDelete
  3. They do not worry IF A BAR IS OPEN and People get destroyed by DRINKING ALCOHOL.. BUT A place for worshipping the GOD who created them and to make people peaceful citizen... They can not tollerate..

    Oh GOD who created of us, feed us and worthy of being worshipped... we ask you to take action against to who ever oppose you and people who worshipp you.

    ReplyDelete
  4. May Almighty Allah bolster all Muslims to withstand against this opposition of non-believers and enlarge the said mosque in Dehiwela!

    ReplyDelete

Powered by Blogger.