Header Ads



100 மில்லியன் பெறுமதி நிவாரணப் பொருட்களுடன், பாங்காதேஷ் விமானம் இலங்கை வருகிறது

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களுடனான விமானம் ஒன்று பாங்காதேஷில் இருந்து இன்று -27- காலை பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

100 மில்லியன் பங்களாதேஷ் டாக்கா பெறுமதியான மருந்து வகைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளடங்கிய பல நிவாரணப் பொருட்கள் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டுப் பிரதமர் ஷெய்க் ஹஸீனாவின் ஆலோசனைக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பாகிஸ்தானினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யித் ஷகீல் ஹுஸைன் அவற்றை கையளித்துள்ளார்.

பாகிஸ்தான் இதற்கு முன்னரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மருந்து வகைகள், மின் பிறப்பாக்கிகள் போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது. 

1 comment:

  1. What for their support for us. There are no humanism. The government is killing Islamic interlectuals.

    ReplyDelete

Powered by Blogger.