Header Ads



MHM. முகம்மதின் மறைவுக்கு, சம்பந்தன் வெளியிட்டுள்ள இரங்கல்

இலங்கை பாராளுமன்றத்தின் 14-வது சபாநாயகர் எம்.எச்.முகம்மத் அவர்களின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

1977 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் நான் அடியெடுத்து வைக்கும்போது எனது உற்ற நண்பராக திகழ்ந்தார் முகம்மத்.

அந்த காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார் முகம்மத். அந்த காலகட்டங்களில் எங்களது உறவு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது, அது பாராளுமன்றத்தின் வெளியேயும் நீடித்தது.

இலங்கையின் அனைத்து சமூகத்தினரும் ஒருங்கே ஆதரிக்கும் ஒரு சிறந்த மனிதர் முகம்மத்.

நமது நாட்டை பெருமையுடனும் தன்மானத்துடனும் சேவை செய்த முதிர்ந்த அரசியல்வாதி அவர். அவரது மறைவானது நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பு.

இந்த துக்க காலத்தில், எனது ஆழ்ந்த இரங்கலையும் ஜெபங்களையும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முகம்மதின் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.