Header Ads



முஸ்லிம் கட்சிகள், தனித்துநின்று வெற்றியீட்ட முடியுமா - இம்ரான் எம்.பி. சவால்


திருகோணமலையிலுள்ள முஸ்லிம் கட்சிகள் முடியுமானால் தனித்து நின்று வென்று காட்டட்டும் என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் காசிம் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்  அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகாலம் முதலே திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்படுகிறது இன்றைய நல்லாட்சியை உருவாக்குவதில் திருகோணமலையின் பங்கை கட்சியின் செயலாளர் என்ற வகையில் தாங்கள் அறிவீர்கள் அடுத்துவரும் தேர்தலை இலக்காக கொண்டு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம்

ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பும் கட்சி ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்பு உட்பட சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் ஆதரவாளர்கள் பலர் அதிருப்தியிலேயே உள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் திருகோணமலையில் ஐக்கியதேசிய கட்சி பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே இயங்குகிறது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்ட சிறுபான்மை கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்களின் கட்சியில் இணைத்துக்கொள்ளும் முயற்சில் இறங்கியுள்ளார்கள் அண்மையில் சில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறுபான்மை கட்சியொன்றில் இணைந்தது இதற்கு சிறந்த எடுத்துகாட்டு

இச்சிறுபான்மை கட்சிகள் காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் முதுகில் சவாரி செய்தே அவர்களின் கட்சியை வளர்கிறார்கள் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்க்குகளின் மூலம் வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சியை அழிக்கும் இவர்களின் செயற்பாட்டை ஏற்றுகொள்ள முடியாது முடியுமானால் இவர்கள் தனித்து நின்று வென்று காட்டத்தும் ஆனால் இவர்களால் ஐக்கிய தேசிய கட்சியின் துணையின்றி திருமலையில் தேர்தலை எதிர்கொள்ள முடியாது

எவ்வகையான பிரட்சனைகள் வந்தாலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலையின் பெரும்பாலான சபைகளை ஐக்கியதேசிய கட்சி கைப்பற்றும் கட்சிக்கு துரோகம் இழைத்த சகலருக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சிறந்த பாடம் புகட்டுவார்கள் அத்துடன் எதிவரும் ஐக்கிய தேசிய கட்சியின் மேதினம் வரலாறு படைக்கும் இதை மேலும் பலப்படுத்த திருமலை ஆதரவாளர்கள் தயாராக உள்ளனர்

எனது தந்தையின் மரணத்தின் பின்பு வந்த மாவட்ட தலைமை விட்ட தவறுகளால் ஏற்பட்ட  வீழ்ச்சியில் இருந்து கட்சியை மீட்டெடுத்து திருகோணமலை மட்டுமல்லாது கிழக்கு மாகாணம் முழுவதும் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவேன் என கூறினார்

No comments

Powered by Blogger.