Header Ads



பௌத்த தேரரின் தாக்குதலில், மாணவி காயம்

பட்டதாரி ஆசிரியரான தேரரின் தாக்குதலுக்கு உள்ளான  க.பொ.த.உயர்தர மாணவி (வயது 18)  ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய தேரரரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

அலவத்துகொடைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மேற்படி மாணவி தேரருக்கு (வயது-29) குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென தேரர் மாணவிக்கு, பலமுறை எடுத்துக் கூறியபோதிலும் அம்மாணவி தொடர்ந்து அச்செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், தேரர் மாணவியையும் அவரது தாயையும் விஹாரைக்கு அழைத்து அறிவுரைகள் கூறியபோது ஏற்பட்ட வாய்த்தர்கத்தின்போது மாணவியை தேரர் தாக்கியுள்ளதாக பொலிஸார் கூறினார். இதன்போது தேரரின் சகோதரியும் அருகில் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1 comment:

  1. தேர்ரைக்கைது செய்து விட்டால் சரியா! மாணவி செய்தது தவறு. அதைவிட மாணவியின் பெற்றோர்கள் நன்றி கூற வேண்டுமே தவிர தேர்ருக்கு எதிராக இருப்பது பிழை.
    சும்மா பாடசாலைசெல்லும் பெண்களை விட்டுவைக்காத இந்த காலகட்டத்தில் , குறுஞ்செய்தி அனுப்பியும் அந்த்தேர்ர் முறைகேடாக நடக்காமல் இருந்திருக்கிறார். அதற்காகவே அவரைப்பாராட்டலாம்.

    ReplyDelete

Powered by Blogger.