Header Ads



அவசரத்திற்கு உதவிய பேர் விமானம் - குவியும் பாராட்டுக்கள்..!

நோர்வே நாட்டில் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த நோயாளி ஒருவருக்காக போர் விமானம் ஒன்று மருத்துவ சாதனத்தை ஏற்றிக்கொண்டு புயல் வேகத்தில் பறந்து நோயாளியை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வேயில் உள்ள Bodo என்ற நகரில் நோயாளி ஒருவர் உயிரிழக்கும் தருவாயில் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், நோயாளியின் உயிரை காப்பாற்றக்கூடிய ECMO என்ற மருத்துவ சாதனம் அந்த மருத்துவமனையில் இல்லை என்பது பிறகு தான் தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் விசாரணை செய்தபோது, சுமார் 280 மைல்களுக்கு அப்பால் உள்ள Trondheim என்ற நகரில் தான் அந்த மருத்துவ சாதனம் உள்ளதை மருத்துவர்கள் நோயாளியின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த 280 மைல்களை சாலை வழியாக காரில் பயணம் செய்தால், 10 மணி நேரம் ஆகும். நோயாளியின் உயிரை நிச்சயமாக காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த உறவினர்கள் அதிரடி நடவடிக்கை ஒன்று எடுத்துள்ளனர்.

மருத்துவ சாதனம் உள்ள Trondheim நகரில் அந்நாட்டு ராணுவ போர் விமானங்கள் பயிற்சி பெற்று வருவதை அறிந்து உடனடியாக அங்குள்ள Borge ‘Gaff’ Kleppe என்ற ராணுவ உயர் அதிகாரியை தொடர்புக்கொண்டு சூழ்நிலையை விளக்கியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் F-16 ரக போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.உடனடியாக போர் விமானத்தில் மருத்துவ சாதனத்தை ஏற்றும் வகையில் இருப்பிடம் தயார் செய்யப்பட உத்தரவிடப்பட்டது.

போர் விமானம் தயார் ஆனதும், மருத்துவ சாதனத்தை ஏற்றிக்கொண்ட அந்த விமானம் புயல் வேகத்தில் பறந்துள்ளது.போர் விமானங்களில் 280 மைல் தூரத்தை 35 நிமிடங்களில் கடக்க முடியும்.

ஆனால், ஒரு நோயாளியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதால் விமானி அசுர வேகத்தில் பறந்துள்ளார்.

அதாவது, 280 மைல் தூரத்தை விமானி 25 நிமிடங்களில் கடந்து அந்த மருத்துவ சாதனத்தை ஒப்படைத்துள்ளார்.

சரியான நேரத்தில் மருத்துவ சாதனம் கிடைக்கப்பெற்றதால், நோயாளியின் உயிரும் காப்பாற்றப்பட்டது.

சூழ்நிலையை அறிந்து சரியான நேரத்தில் உதவிய நோர்வே நாட்டு ராணுவ துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

No comments

Powered by Blogger.