Header Ads



ராஜபக்ஸ விமான நிலையத்தை, கைப்பற்ற 3 சீன நிறுவனங்கள் களமிறங்கின


அம்பாந்தோட்டை- மத்தல அனைத்துலக விமான நிலையத்தைக் கைப்பற்றும், போட்டியில் மூன்று சீன நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன.

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை வரும் ஒரு ஆண்டுக்குள் தனியார் மயப்படுத்தப் போவதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் மயப்படுத்தப்படவுள்ள மத்தல விமான நிலையத்தை, பொறுப்பேற்று நடத்துவதற்கு மூன்று சீன தனியார் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தமது யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளன.

இந்த விமான நிலையத்தை சீன அரசாங்கமே நிறுவியதால், இதனைப் பொறுப்பேற்பதற்கான திட்டத்தை சீன அரசாங்கம் முன்வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விமான நிலையத்தை கட்டுவதற்குப் பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்கே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தற்போது, கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் வருமானத்தின் மூலமே, மத்தல விமான நிலையத்தை அமைக்க சீனாவிடம் பெறப்பட்ட கடன் அடைக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இவ்வாறு செய்யப்படமாட்டாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

209 மில்லியன் டொலர் செலவில் மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்கு, சீனா 190 மில்லியன் டொலர் கடனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. This is the reality and the long term plane of China.
    They give to 3rd world country and when they find it difficult to repay it . They have a option to buy the project which they funded.
    Same as polimudalali in our country.
    Then govt and buying country make nice story to make belive by the stupid people.


    ReplyDelete
  2. This is the reality and the long term plane of China.
    They give loan to 3rd world country and when they find it difficult to repay it . They have a option to buy the project which they funded.
    Same as polimudalali in our country.
    Then govt and buying country make nice story to make belive by the stupid people.

    ReplyDelete

Powered by Blogger.