Header Ads



மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் மின்தடை - 30 நிமிடங்கள் இருளில் மூழ்கிய மண்டபம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடமேல் மாகாண சுகாதார மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சின் விருது வழங்கும் விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்த போது மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படாது என மின்வலு அமைச்சு அறிவித்திருந்தது.

குருணாகலில் அமைந்துளள் மாகாணசபை கேட்போர் கூடத்தில் 29-03-2016 பிறப்கல் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.

எனினும், ஜனாதிபதி உரையாற்றத் தொடங்கி 10 நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர தேவைக்காக பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியும் செயற்படவில்லை. இதனால் சுமார் அரை மணித்தியாலங்கள் கேட்போர் கூடம் இருளில் மூழ்கியிருந்தது.

மின் பந்தங்களின் உதவியுடன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாண சபையின் தலைவர் டிக்கிரி பண்டாரவின் அதிகாரிகள் ஊடகவியலாளர்களை இதற்கு முன்னர் அச்சுறுத்திய காரணத்தினால் குருணாகல் மாவட்ட ஊடகவியலாளர்கள் எவரும் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.