Header Ads



தேசிய பட்டியலில் பொன்சேகாவை, நியமிப்பது சட்ட விரோதம் - வாசுதேவ

வேறொரு கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரை ஐ.தே.க. தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது சட்டவிரோதமானது என ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நானயக்கார எம்.பி தெரிவித்தார்.

மாற்று எதிர்க்கட்சி (கூட்டு எதிர்க்கட்சி) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது.

ஐ.தே.க.வும் ஜனநாயக கட்சியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை தேசியப்பட்டியலினூடாக நியமிப்பது குறித்து இங்கு வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் சரத்பொன்சேகாவின் பெயர் தேசியப்பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் இவரை நிராகரித்துள்ளனர். வேறுகட்சியில் போட்டியிட்டவரை மற்றொரு கட்சி தேசியப்பட்டியலின் ஊடாக நியமிப்பது சட்ட விரோதம் இங்கு இரு தவறுகள் இடம்பெற்றுள்ளன.

ஷம்ஸ் பாஹிம்

2 comments:

  1. தாங்களுக்கு தெரியா சட்டமுமில்லை தாங்களுக்கு தெரியா ஊத்தைப்பேச்சுக்களும் இல்லை பெரியவரே....

    ReplyDelete
  2. சட்ட விரோதமா அல்லது உங்களின் விரோதமா? போடா புண்ணாக்கு.

    ReplyDelete

Powered by Blogger.