Header Ads



அமெரிக்கா உருவாக்கியுள்ள நுளம்பு

மலேரியா நோய்தொற்றை தடுக்க மரபணு மாற்றப்பட்ட இனப்பெருக்க நுளம்பை உருவாக்கி இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட் டுள்ளனர்.

ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டிக்கும் இந்த தொழில்நுட்பம் செயற் பட்டால் மனிதனுக்கு மலேரியாவை பரப்பும் நுளம்புகளை தடுக்க புதிய வழி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மரபணு தணிக்கை முறையில் நுளம்புகளின் டி.என்.ஏவில் புதிய எதிர்ப்பு மரபணு ஒன்றை விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இவ்வாறான மரபணு மாற்றப்பட்ட நுளம்புகள் இனப்பெருக்கத்தின் மூலம் எதிர்ப்புத் தன் மையிலான சந்ததி களை பரப்பும் என்று இந்த ஆய்வு குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் குறித்த நுளம்புகள் மனிதர்களை குத்தும்போது அதன் மூலம் மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளை கடத்த முடியாமல்போகும்.

உலக சனத்தொகையில் பாதியளவான சுமார் 3.2 பில்லியன் மக்கள் மலேரியா தாக்கும் ஆபத்துடன் உள்ளனர். நுளம்பு குத்துவதை தடுக்கும் வகையிலான வழி முறைகள் மற்றும் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மூலம் மலேரியா நோயிலிருந்து பாதுகாக்க உதவிய போதும் இந்த நோயினால் இன்றும் கூட ஆண்டுக்கு சுமார் 580,000 பேர் கொல்லப்படுகின்றனர். 

1 comment:

  1. புதிய நுளம்பும் கடிக்கத்தானே போகின்றது?

    அது சரி, படைப்பவன் கடவுள் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.