Header Ads



"நெருப்புடன் விளையாட வேண்டாம்" - ரஷ்யாவுக்கு அர்துகான் எச்சரிக்கை


-Musthafaansar-

"நெருப்புடன் விளையாட வேண்டாம்" என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் துர்க்கி ஜனாதிபதி அர்துகான்.

"புட்டின் கூறுகிறார்: தீவிரவாதத்தில் இரட்டை வேடம் போடுபவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்" நான் அவருடன் முழுமையாக உடன்படுகிறேன், என்று அர்துகான் கூறினார்.

"உண்மையில், 380,000 மக்களைக் கொலை செய்த பஸார் அசாதின் ஆட்சிக்கு உதவி செய்பவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகிறார்கள். தாயிஷுக்கு (ISIS) எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற போர்வையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற போராட்டக் குழுக்களை தாக்குவது தான் நெருப்புடனான விளையாட்டு. எமது எல்லையைப் பாதுகாக்கும் எமது உரிமையுடன் தொடர்புபட்ட ஒரு சம்பவத்தை காரணமாக வைத்து சர்வதேச நிகழ்வொன்றில் கலந்துகொள்ள ரஷ்யா சென்ற எமது பிரஜைகளை இன்னல்படுத்துவது தான் நெருப்புடன் விளையாடுதல். பொறுப்பற்ற முறையில், மனிதாபிமான உதவி எடுத்துச் சென்ற வாகனங்களை தாக்கியது தான் நெருப்புடன் விளையாடும் செயல். நெருப்புடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ரஷ்யாவை மிகவும் நேர்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்."

No comments

Powered by Blogger.