Header Ads



பள்ளிவாசல் கட்டுவது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒரு செயல் - அபூபக்கர் சித்தீக்


-இக்பால் அலி-

பள்ளிவாசல் கட்டுவது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒரு செயல் ஆகும். நாம் எல்லோரும் உலகத்திலோ வாழ்வது நிரந்தரமாக இருப்பதற்காக அல்ல. மாறாக இந்த உலகத்தை நிரந்தரமான ஒரு உலகத்திற்கு பயிர் நிலமாகவும் அதற்கான  விதைகளை நட்டு அறுவடை செய்யக் கூடிய இடமாகவே இவ்வுலகம் உள்ளன. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த உலகத்திலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பறஹகதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.

பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் மீள் குடியேற்றப்பட்ட முசலி பிரதேச செயலாளர் பிரிவில் புதுவெளிப் பிரதேசத்தில் 2 கோடி ருபா செலவில் பள்ளிவாசல், வீடு , கடைத்தொகுதி, முன்பள்ளிப் பாடசாலை, சுற்றிவர மதில், நீர் விநியோகம் உள்ளடங்கிய இஸ்லாமிய நிலையக்  கட்டிடத் தொகுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை 6-11-2015  நடைபெற்றது. ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம் அபூபக்கர் சித்தீக் மதனியினால் இந்த இஸ்லாமிய நிலையம் பொது மக்களின் பயனப்பாட்டுக்காக உத்தியோhபூர்மாக கையளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்

நாளை மறுமையிலே எங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் எனில்  சுவர்க்கம் கிடைக்க வேண்டும் எனில் கண்டிப்பாக இந்த உலகத்தில்  நாம் வாழக் கூடிய வாழ்க்கை வணக்கமாக மாற வேண்டும்.  அந்த வாழ்க்கை வணக்கமாற மாற்றக் கூடிய மிக முக்கியமான இடம்தான் பள்ளிவாசல். அந்தப் பள்ளிவாசலோடு சம்மந்தப்பட்டு இருப்பதன் காரணமாகத் தான் எமது வாழ்க்கையை  நாம் சிறந்ததொரு வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

பள்ளிவாசல் கட்டுவது என்பது அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல். அல்லாஹ் எங்களைப் படைத்தான. அவன் எங்களைப் படைத்த நோக்கத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜின்களையும் மனிதர்களையும் என்னை வழிபடுவதற்கு அன்றி என்னைப் படைக்க வில்லை என அல்லாஹ் கூறுகின்ற காரணத்தினால் இறைவனை வணங்கக் கூடிய மிக முக்கியமான இடமாக பள்ளிவாசல்கள் அமைகின்றன. எனவே இறைவனை வணங்கக் கூடிய பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமான இடங்களாக இருந்து கொண்டு இருக்கின்றன என்பதை நபி (ஸல்) அவர்கள் ஹதீஸிலும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலே  அவர்களுக்கு இஸ்லாம் விடக் கூடிய கட்டளை ஒவ்வொரு முஸ்லிமும் பருவ வயதை அடைந்து விட்டால்  பள்ளிவாசல்களுக்குச் சென்று ஒரு நாளைக்கு ஐந்து விடுத்தம் தொழகையில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயக் கடமையாகும்.  இந்த வகையில் ஊரிலுள்ள 250 குடும்பங்கள் ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று விகிதம் எனப் பார்ப்போமாயின்  சுமார் 750 பேர் வரை வருவார்கள். இந்த 750 பேரும் தொழுவதாக இருந்தால்  ஒரு நபருக்கு 6 இஸ்கியார் பீட் விகிதம்  கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அவ்வாறாயின் 750 ஆறால் பெருக்கிப் பார்ப்போமாயின்   அது ஆயிரக் கணக்கான இஸ்கியார் பீட்டாக அமையும் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுதல் வேண்டும். அந்தவகையில் எங்களால் முடிந்தளவு மீள் குடியேற்;றப்பட்ட மக்களின் தொகைக்கு ஏற்ப பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அல்லாஹ் பெரும் பாக்கியத்தை தந்துள்ளான். எனவே நாம் அல்லாஹ்வுக்கும் இந்தப் பள்ளியை நிமாணிப்பதற்காக உதவி செய்த வெளிநாட்டிலுள்ள சகோதரருக்கு நன்றியையும் பிரார்த்தனையையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். 

நபி நாயகம் (ஸல்) அவர்களும் காபிர்களினால் வெளியேற்றப்பட்ட போது மக்காவிலிருந்து மதினாவுக்கு சென்ற போது முதன் முதலில் பள்ளிவாசல்ளைத் தான் கட்டினார்கள். இது பெரியதொரு வரலாற்றுச் சம்பவமாகும். இஸ்லாமிய வளர்ச்சியில் முக்கிய பங்கை இந்த வரலாற்றுசம்பவம் இடம்பிடித்துள்ளது. அதேபோன்று இந்த மீள்குடியேற்றப் பிரதேசத்தில் இந்த வாட்டில் வாழும் இன்னொரு பெரும்பான்மைச் சமூகத்திரால் ஆயுத முனையில்  பலத்தமாக வெளியேற்றப்பட்டவர்கள். அப்பொழுது வெளியேற்றப்படும் போது பக்கத்லுள்ள பிரதேசங்களில் குடியேறி பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் அவதிகளும் அளப்பரியவை. அன்று  இருந்து இன்று வரை இந்த மக்களுடைய வாழ்வதார விடயங்களிலும் முதல் அல்லாஹ்வின் கொள்ளை கோட்டுபாடு இறைநம்பிக்கை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கை செலுத்தி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. பள்ளிக்கூடம் கட்டுவதும் அல்லாவுக்கு மிக விருப்பமான ஒரு செயல்தான்...

    ReplyDelete
  2. அப்ப பாடசாலைக்கு ஏன் வீணாக போகவேண்டும்

    ReplyDelete
  3. After you die can follow anything behind you

    ReplyDelete

Powered by Blogger.