Header Ads



அகில இலங்கை 100 மீட்டர் ஓட்டப்போட்டியில், தங்கப் பதக்கம்பெற்ற பாத்திமா சபிஹா

-இக்பால் அலி-

இம்மறை நடைபெற்ற அகில இலங்கையில் ரீதியாலன   பாடசாலைகள் மட்டத்தில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கண்டிவிஹார மகாதேவி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த  பாத்திமா சபிஹா 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடததைப் பெற்று தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.

ஓக்டோபர் மாதம் தியகமவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் பங்கு கொண்டு இந்த மாணவி வெற்றி தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த மாணவி 17 வயதுக்குக் கீழ் மட்ட ஓட்டப் போட்டிகளில் பங்கு கொண்டு மாவட்ட மவட்டத்திலும் மாகாண மட்டத்திலும் போட்டியிட்டு முதலிடம் பெற்று இரு தடவை சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டவர். இம்முறை நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் பங்கு கொண்டு  தற்போது தங்கம் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

இந்த மாணவி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்று  முறையே இரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்ற இந்த மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

இந்த மாணவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகெடுவ, மத்திய மாகாண புதிய ஆளுநர் சுரங்கணி எல்லாவெல, வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்களிடமிருந்து விருதுகளையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றவர்.

பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம் மற்றும் மத்திய மாகாணத்தில்  நன்மதிப்பைப் பெற்ற ஒருவராகத் திகழ்கின்றார். 

இந்த மாணவி இம்முறை க. பொ. த சாதாரணப் பரீட்சகை;கு தோற்றவுள்ளார்.  இம்மாணவிக்கு  எதிhகாலத்தில்  துறைமுகத்தில் தொழில் வழங்குவதற்காக உத்தவாரதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாணவியின் பெயர் தந்தை யமீக் இவர் செருப்பு கைத் தொழில் பேட்டை ஒன்று நிறுவி வியாபாரம் செய்து வருகிறார். தயார் சிஹாரா. இவர்கள்  கண்டி நகரிலுள்ள கட்டுக்கலைப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் ஸபீஹா!

    உனது திறமை எந்த தடையுமின்றி மிளிரட்டும்.

    ஒரு பெண்ணாக நீ பிரதிநித்துவம் புரியும் நமது சமூகத்தில் நிலவும் நடைமுறைக்குதவாத மௌட்டீக சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, நடைமுறைப்புரிதலுடனும் அறிவியல் தெளிவுடனும் செயற்படுவதற்கு இந்த அங்கீகாரமும் பாராட்டுகளும் உதவட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.