Header Ads



ஞானசாரரும் அவர் குழுவினரும், சட்­டத்­தி­லி­ருந்து தப்­பித்துக்கொள்­ள­ மு­டி­யாது - சிராஸ் நூர்தீன்

-ARA.Fareel-

சட்­டத்தின் கைகள் மிக நீள­மாக இருக்­கின்­றன. பொது பல­சே­னாவின் குரு­மார்கள் மாத்­தி­ர­மல்ல எந்­த­வொரு குற்­ற­வா­ளியும் சட்­டத்­தி­லி­ருந்து தப்­பித்துக் கொள்ள முடி­யாது.

சந்­தேக நபர்கள் நீதி­மன்றில் ஆஜ­ராகா விட்டால் அவர்கள் இல்­லா­மலே வழக்­கினை விசா­ரித்து தீர்ப்பு வழங்கும் அதி­காரம் நீதி­மன்­றுக்கு இருக்­கி­றது. என RRTஅமைப்பின் தலை­வரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான சிராஸ் நூர்தீன் கருத்து வெளி­யிட்டார்.

பொது­ப­ல­சே­னாவின் குரு­மார்கள் குற்­ற­வா­ளி­க­ளாக அலைந்து திரிய விரும்­ப­வில்லை. அதனால் நாட்டின் எந்த நீதி­மன்­றிலும் ஆஜ­ரா­கு­வ­தில்லை எனத்­தீர்­மா­னித்­துள்­ள­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் போதே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில் எமது நாட்டில் சட்டம் ஒன்று இருக்­கி­றது. சட்­டத்­திற்கு அனை­வரும் சம­மா­ன­வர்கள். பொது­ப­ல­சேனா அமைப்பின் குரு­மார்­க­ளுக்கு எதி­ராக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நட­படி முறைக் கோவையின் படி வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

அவர்­க­ளுக்கு எதி­ராக தண்­டனைச் சட்டக் கோவையின் பிரி­வு­களின் கீழ் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. குற்­ற­வா­ளிகள் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்தப் பிணைகள் நிபந்­த­னை­களின் கீழேயே வழங்­கப்­பட்­டுள்­ளன.  பொது­ப­ல­சே­னாவின் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள குரு­மார்கள் நீதி­மன்றில் குறிப்­பிட்­ட­தி­னத்தில் ஆஜ­ரா­கா­விட்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக பிணை நிபந்­த­னையை மீறி­ய­தாக நீதி­மன்றம் நட­வ­டிக்கை எடுக்கும்.

குற்­ற­வியல் நட­ப­டிக்­கோவை இலக்கம் 192 உப­பி­ரிவு 2இன் படி ஒரு குற்­ற­வாளி நீதி­மன்றில் ஆஜ­ரா­கா­த­வி­டத்து நீதி­மன்றில் அவ­ரது சமுகம் இன்­றியே விசா­ரணை நடாத்தி தீர்ப்பு வழங்­கப்­பட முடியும். அதனால் நீதி­மன்றில் வழக்­கு­க­ளுக்­காக ஆஜ­ராக வேண்­டிய பொது பல சேனா அமைப்பின் குரு­மார்கள் ஆஜ­ரா­காது விட்டால் இந்த நடை­மு­றையை நீதி­மன்றம் அமுல்­ப­டுத்தும் குற்­ற­மி­ழைத்­த­வர்கள் ஒரு போதும் தாம் நினைத்­த­வாறு சட்­டத்­தி­லி­ருந்தும் தப்­பித்துக் கொள்­ள­மு­டி­யாது என்றார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் குரு­மார்கள் பல­ருக்கு எதி­ராக நீதி­மன்­றங்­களில் பல வழக்­குகள் விசா­ர­ணையின் கீழ் இருக்­கின்­றன. அதன் செய­லா­ளர் ஞான­சார தேரர் மீது குர்ஆன் அவ­ம­திப்பு உட்­பட பல வழக்­குகள் விசா­ர­ணையின் கீழ் உள்­ளன.

ஜாதிக பல சேனாவின் தலை­வரும் முன்னாள் மஹி­யங்­கனை பிர­தேச சபை உறுப்­பி­ன­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் பொது­பல சேனா அமைப்பின் குரு­மார்­க­ளுக்­கெ­தி­ராக 8 வழக்­கு­களைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்குகளின் சந்தேக நபர்கள் 36 பேரும் பொதுபலசேனாவின் உறுப்­பி­னர்­க­ளாகும். 

வட்­ட­ரக்க விஜி­த­தே­ரரை கடு­மை­யாக தாக்­கி­யமை, காயம் விளை­வித்­தமை,  அவர் பய­ணித்த வாக­னத்தை சேதப்­ப­டுத்­தி­யமை உட்­பட பல குற்­றச்­சாட்­டு­களின் கீழே வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. வட்டரக்க விஜித தேரரை நம்மில் பலர் மறந்துவிட்டதுபோல் எனக்கு கவலையாக இருக்கின்றது. சோபித தேரரைவிடும் முஸ்லிம்களுக்காக வேண்டியே தனது உயிரையும் துச்சமாக மதித்து கருத்து வெளியிட்டு பொது பல சேனாவின் அராஜக தாக்குதல்களுக்கு உள்ளானவர் அவர்.

    அவருக்கும் நன்றியுள்ள சமூகமாக நாம் இருப்போம். அவர் தற்போது எங்கு, என்ன நிலையில் இருக்கிறார் என்பதை யாராவது அறியத்தருவீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.