Header Ads



"பணபலத்தாலும், பாலியல் கவர்ச்சிகளாலும் ஈரானை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி"


மேற்கத்திய கலாச்சாரம் மூலம் ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்துவருவதாக ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 

ஈரானில் அதிகாரத்தில் உள்ளவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் ஈரான் நாட்டு மக்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என அமெரிக்க முயற்சி செய்கிறது.

மேலும், தங்களுடைய பணபலத்தாலும், பாலியல் கவர்ச்சிகளாலும், மேற்கத்திய கலாச்சாரத்தாலும் மக்களின் மனதை மாற்றி அவர்களை ஏமாற்றுகின்றனர்.

மக்கள் மத்தியில் மதநம்பிக்கைகளை மாற்றி, அவர்களை தங்கள் நாட்டின் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள், இது ஈரான் நாட்டிற்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும் எனக்கூறியுள்ளார்.

ஈரானில் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் இவர்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.