Header Ads



துருக்கிக்கு மன்னிப்பு கிடையாது - விளாமிடிர் புட்டின் சீற்றம்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் துருக்கிக்கு ஆயில் கடத்தி வருகின்றனர், இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள ரஷியா தாக்குதலை நடத்தஉள்ளது.
 
பனிப்போர் 

ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள் 2 தினங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தின. இதன்காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. 

ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறுகிறது. இது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை துருக்கி நேற்று வெளியிட்டது. 

பொருளாதார தடை

‘தெற்கு நோக்கி பறந்து வருதை உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று ஆங்கிலத்தில் கூறுவது அதில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் தாக்குதலில் சிக்கி உயிர்பிழைத்த ரஷியாவின் விமானி, எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று கூறிவிட்டார். சிரியா எல்லையில் ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் என தனது ராணுவ பலத்தை சிரியாவை சுற்றிலும் ரஷியா அதிகரித்து உள்ளது. 

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. 

துருக்கியின் இந்த நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை அளித்தது. துருக்கி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்தார். இந்த நிலையில், துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு எடுத்துள்ளது.

மன்னிப்பு கேட்க முடியாது

இதற்கிடையே விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என துருக்கி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. ‘‘இது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்தது சரிதான்’’ என்று கூறிஉள்ளது.

எல்லையை பாதுகாக்க ராணுவம் அதனுடையை பணியினை சிறப்பாக செய்து உள்ளது என்று கூறிஉள்ள துருக்கி, யார் எல்லையை அத்துமீறினார்களோ அவர்கள்தான் மன்னிப்பு கேட்கவேண்டியது அவசியம் ஆகும் என்று தெரிவித்து உள்ளது. ரஷியா ராணுவ பலத்தை அதிகரித்து வரும்நிலையில் நெருக்கடியை குறைக்க ரஷியா மற்றும் எங்களுடைய கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று துருக்கு பிரதமர் கூறிஉள்ளார். 

ஆயில் சந்தை

ஐ.எஸ். தீவிரவாதிகள் சட்டவிரோத சந்தையில் ஆயில் விற்பனை செய்வது மூலம் பணம் பெற்று வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் ஆயில்களை கள்ளசந்தை மூலம் துருக்கி மற்றும் ஈராக்கின் குர்திஸ் பகுதிகளுக்கு அனுப்புகிறது என்றும் அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது.

ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, அந்நாட்டிற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயிலை கடத்தும் விவகாரம் ரஷியாவின் பார்வையில் பட்டு உள்ளது.

பிரான்ஸ் ஆதரவு

ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலையை சீர்குலைக்க முதலில் அவர்களின் வணிகத்தை சீர்குலைக்க ரஷியா திட்டமிட்டு உள்ளது. இதில் முதலில் சிக்கிஉள்ளது சட்டவிரோத ஆயில் சந்தைதான். ரஷியா இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸிடம் பேசிஉள்ளது. 

ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிதிசந்தையை சீர்குலைக்க பிரான்சும் ஒப்புதல் அளித்து உள்ளது என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பகுதியில் இருந்து ஆயில் எடுக்கப்பட்டு துருக்கிக்கு கடத்தப்படும் நிலைகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்த இருநாடுகளும் முடிவு எடுத்து உள்ளது. 

தடை செய்யப்படும்

மாஸ்கோவில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே உடனான சந்திப்பை அடுத்து பேசிய விளாடிமீர் புதின்,  ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் இருந்து துருக்கிக்கு ஆயில் கடத்தப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்று கூறிஉள்ளார். 

“ஆயில் கடத்திச்செல்லும் வாகனங்களை சங்கிலிபோன்று தொடர்ந்து எல்லையைத் தாண்டி செல்கிறது” என்று கூறிஉள்ள விளாடிமீர் புதின், இவ்விவகாரம் ஏற்கனவே ஜி20 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது என்று கூறிஉள்ளார். ஆயில் வாகனம் துருக்கிக்கு கொண்டு செல்லப்படுகிறது, பின்னர் வாகனங்கள் திரும்பி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக ஆயில் கடத்தப்படும் விவகாரத்தில் துருக்கிக்கு மன்னிப்பு கிடையாது என்று ரஷிய அதிபர் புதின் குறிப்பிட்டு  உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகிஉள்ளது.

No comments

Powered by Blogger.