Header Ads



மொஹமட் சியாம் கொலை, வாஸ் + மகன் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி லலித் ஜயசூரிய, குசலா சரோஜனி வீரவர்;த்தன மற்றும் அமேன்ர செனவிரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம் பெற்றது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொஹமட் அஹமதீன் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது

இந்த வழக்கின் தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Why not mentioned other's name. It is purposely left those one's name or Jaffna Muslim side do not know those name. In this case main culprit is a Muslim. Why not mentioned about him, he is freed or not.

    ReplyDelete
  2. What happened to main culprit in the name of muslim.

    ReplyDelete

Powered by Blogger.