Header Ads



2 விவகாரங்களில் முரண்பட்ட ஜனாதிபதி, பிரதமர் - மைத்திரியிடம் இளமை இருப்பதாகவும் பெருமிதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்ற ஊகத்தை ஜனாதிபதியின் ஆலோசகரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஸ்ரீலால் லக்திலக்க வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட்டதன் பின்னர், தேர்தலில் போட்டியிடமால் இருப்பதற்கு எவ்வித காரணங்களும் ஜனாதிபதிக்கு கிடையாது என அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டுமென மக்கள் விரும்பினால், அவர் போட்டியிடுவதில் சிக்கல்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு தடவை நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்காக மைத்திரிபால சிறிசேன போட்டியிட மாட்டார் என அவர் குறிப்பிட்டு;ள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியலில் ஈடுபட இன்னமும் அவகாசமும் இளமையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

13 மற்றும் 17ம் திருத்தச் சட்டங்களைத் தவிர அனைத்து திருத்தச் சட்டங்களும் நிறைவேற்று அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்து, அமைச்சரவைக்கு பதில் சொல்லக்கூடிய நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரணில் தலைமையிலான அமைச்சரவைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சில விடயங்களில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதனை மறுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மற்றும் அவன்ட் கார்ட் விவகாரங்களில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு முரணான நிலைப்பாட்டை பிரதமர் கொண்டிருந்தார் எனபதனை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.