Header Ads



நவாபுகள் காலத்தில் கட்டப்பட்ட, கோட்டையில் அழகான 2 பள்ளிவாசல்கள் (படங்கள்)

-Peace Mohamed-

திருச்சியில் இருந்து எறதாழ 70  கிலோமீட்டர் தொலைவில் பெரம்பலூருக்கு அருகில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை. அங்கே நவாபுகள் ஆண்ட காலத்தில் கட்டபட்ட அழகான கோட்டை ஒன்று இன்றும் பழமை மாறாமல் இருக்கிறது.

கோட்டைக்கு மேலே ஒரு பள்ளிவாசலும் கோட்டை வளாகத்திற்க்கு உள்ளே கீழே ஒரு ஜும்மா பள்ளிவாசலும் இருக்கிறது, இந்த பகுதி வழியாக பயணம் செய்பவர்கள் கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வரலாம்.

கோட்டை பள்ளிவாசலில் ஜும்மா மட்டும் நடைபெறுகிறது, மற்ற தொழுகைகளை ஊருக்குள் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் தொழுதுகொள்ளலாம்,

வழி: நான்கு வழிசாலை மார்க்கமாக பெரம்பலூரில் இருந்து தொழுதூர் வழியில் மங்களமேடு என்ற நிறுத்தத்தில் இருந்து இடது புரம் திரும்பி சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.







No comments

Powered by Blogger.