Header Ads



அநுராதபுர முஸ்லிம்கள் நோற்ற நோன்பும், கேட்ட துஆவும் எனது வெற்றிக்கு காரணம் - இஷாக் Mp

(MS.FAHIM)

1947 முதல் இன்று வரை அனுராதபுர மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு சிறுபான்மை உறுப்பினரும் பாராளுமன்றம் செல்லவில்லை. இந்த கசப்பான வரலாற்றை இறைவனின் உதவியுடன் 2015 இல் மாற்றியமைக்க முடிந்துள்ளது. இது எனது வெற்றியல்ல. அனுராதபுர மாவட்டத்திலுள்ள சகல இன மக்களினதும் வெற்றியே இது. சரித்திரம் காணாத மகத்தான வெற்றி. ஐ.தே. க. ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது கிடையாது. முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் இடமளிக்க மாட்டார். அவர் மீது மூஸ்லிம்கள் மட்டுமின்றி தமிழ் மக்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை வீண் போகாது என அநுராதபுர மாவட்ட ஐ. தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் தெரிவித்தார். மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் நோற்ற நோன்பும் கேட்ட துஆவும் வீண் போகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அனுராதபுரத்தில் இருந்து முதற் தடவையாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள இஷாக்குடனான பேட்டியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி:- அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருப்பது குறித்து என்ன கூற விரும்புகிaர்கள்?

பதில்:- 1947 முதல் இன்று வரை அனுராதபுர மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு சிறுபான்மை உறுப்பினரும் பாராளுமன்றம் செல்லவில்லை. இந்த கசப்பான வரலாற்றை இறைவனின் உதவியுடன் 2015இல் மாற்றியமைக்க முடிந்துள்ளது.

இது எனது வெற்றியல்ல. அனுராதபுர மாவட்டத்திலுள்ள சகல இன மக்களினதும் வெற்றியே இது. சரித்திரம் காணாத மகத்தான வெற்றி. தியாகம் என்பனவே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அரசியலுக்காக முஸ்லிம்கள் நோன்பு நோற்ற சரித்திரம் எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனது வெற்றிக்காக நோன்பு நோற்குமாறு நான் சென்ற கிராமங்களில் எல்லாம் மக்களிடம் வேண்டியிருந்தேன். இதன்படி ஆயிரக்கணக்கான மக்கள் எனக்காக நோன்பு நோற்றிருந்தார்கள். அனுராதபுரத்தில் சரித்திரம் காணாத மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். எமது மக்களின் கனவும் அதுவே. என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்த எனது இனிய மக்களின் அர்ப்பணிப்பை துஆவை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

கேள்வி: தேர்தல் காலத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று வீர்களா?

பதில்: நிச்சயமாக. என்னால் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளைத்தான் மக்களுக்கு அளித்திருக்கிறேன். அனுராதபுரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனிப் பாடசாலை அமைப்பது எனது பிரதான கனவாகும். அது இந்த ஆட்சிக் காலத்தில் நனவாகும் என நம்புகிறேன். எமது மக்கள் முகம் கொடுக்கும் குடிநீர் வசதி வழங்கவும் சிறுநீரக நோய் காணப்படுகிறது. அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீர் வசதி வழங்கவும் சிறூநீரக நோய் பிரச்சி னைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கான மார்க்கக் கல்விக் கூடம் அமைப்பதும் எனது வாக்குறுதிகளில் ஒன்று. அதனையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன். அரசியலுக்கு வர முன்பிருந்தே மக்களுக்கு சேவையாற்றியிருக்கிறேன். அதனைவிட கூடுதல் சேவை புரியவே இந்தப் பதவியைப் பயன்படுத்த இருக்கிறேன்.

கேள்வி: அநேகமானோர் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் பாராளுமன்றம் வருகிறார்கள். நீங்கள் மாற மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

பதில்:- பணம் சம்பாதிப்பது எனது நோக்கமல்ல. மக்கள் சேவையையே நோக்காகக்கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனது பாராளுமன்ற சம்பளத்¨க் கூட நான் எடுக்கப்போவ தில்லை.
அதனைக் கூட நான் சிறுநீரக நோயாளர்கள், புற்றுநோயாளர்கள்,முதியோர் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறேன். எனது பாராளுமன்ற சம்பளத்தை வைப்பு செய்வதற்காக வங்கிக் கணக்கொன்றை அதிகாரிகள் கேட்ட போது நான் எனது சம்பளத்தை எடுக்கப் போவதில்லை என்பதை அறிவித்தேன். எந்த ஒரு எம்.பியும் இவ்வாறு சம்பளம் வேண்டாம் என மறுத்தது கிடையாது என அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இதன்மூலம் தேர்தல் காலத்தில் நான் வழங்கிய முதலாவது வாக்குறுதியை நிறைவேற்றி யிருக்கிறேன். எனது பிரதிநிதித்துவத்தி னூடாக சரித்திரம் காணாத மாற்றங்களைச் செய்ய இருக்கிறேன். எம்.பியாக அன்றி சேவகனாகனவே செயற்படுவேன். வாக்குறுதி அளிக்க முன்னர் மக்களுக்கு முடிந்தளவு சேவை புரிந்திருக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்வளவு நன்றிக்கடனுள்ளவனாக இருப்பேன் என்பதை மக்கள் உணர்வார்கள். எனது மக்களுக்கு வாக்குறுதியளித்ததன் மூலம் நான் அவர்களுக்கு கடனாளியாக இருக்கிறேன். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அந்தக் கடனைத் தீர்ப்பேன் என மக்களுக்கு உறுதியாக கூறிக் கொள்கிறேன். எனது தந்தை வபாத்தாவதற்கு முன் (மரணமாவதற்கு முன்) என்னிடம் ஒரு விடயத்தை கூறிச் சென்றார். மகனே நீ வாழ்வில் உயரும் போது நெற்கதிரைப் போல இருக்க வேண்டும். வளர்கின்ற காலத்தில் உயரும் அறுவடை காலத்தில் அது பணிவாய் பூமியை நோக்கித் தலை சாய்க்கும்.அது போல நீ நடந்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் பாராளுமன்ற உறுப்பினரான போதும் ஒருபோதும் மாறமாட்டேன். இன்றும் எனது தாயின் சொற்படியே நடந்து கொள்கிறேன். அது தவிர சிறந்த மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் களைப் பின்பற்றி வருகின்றேன். அதனால் தவறான வழியில் செல்லமாட்டேன். பெளத்தபிக்குமார், தமிழ் பூசகர்கள். கிறிஸ்தவ பாதிரிமார்கள் போன்றோரின் வழிகாட்டல்களையும் பெற்று வருகிறேன்.

கேள்வி: உங்களது தந்தையின் கனவை நிறைவேற்றவே இன்று அரசியலுக்கு வந்திருக்கிaர்கள். அவர் இன்று உயிருடன் இருந்தால் என்ன நினைத்திருப்பார்.?

பதில்:- எனது அனுராதபுர மக்களுக்கு சேவை புரிவதே அவரது அவா. அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த வெற்றியைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பார். எனது இந்த வெற்றியை அனுராதபுர மாவட்டத்திலுள்ள அனைத்து இன மக்களும் தமது வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதனைவிட கூடுதல் சந்தோசப்படுபவர் எனது தந்தையாகவே இருப்பார். நான் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு நான் வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது எனது தாய் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினார். நான் செய்யும் சகல நல்ல விடயங்களையும் எனது தந்தைக்காகவே செய்து வருகிறேன்.

கேள்வி:- கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு வரை முஸ்லிம்கள் பயத்துடனும் சந்தேகத்துடனுமே வாழ்ந்தார்கள். அந்தநிலை ஜனாதிபதித் தேர்தலின் பின் மாறியது. புதிய ஆட்சியிலும் முஸ்லிம்கள் நம்மதியாக வாழும் நிலை நீடிக்கும் என நம்புகaர்களா?

பதில்:- நிச்சயமாக. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இனவாத பொக்குடைய வரல்ல. 1946இல் ஐ. தே. க. ஆரம்பிக்கப்பட்டது முதல் டி. எஸ். சேனநாயக்கவின் காலம் முதல் ரணில் விக்கிரமசிங்கவின் காலம் வரை எமக்கு எந்த அநியாயமும் நடக்கவில்லை. முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். அவர் மீது முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழர்களும் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது. அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே பெரும்பாலான முஸ்லிம் கள் ஐ. தே.க. வுக்கு வாக்களித்தார்கள். அதனால் பெரும்பான்மை வாக்குகளுடன் ஐ. தே. க. வுக்கு ஆட்சியமைக்க முடிந்தது.

கேள்வி:- அரசியலில் ஒரு போதும் ஈடுபட்டிருக்காத உங்களை அடையாளங் கண்டு அ. இ. ம. கா. சார்பாக உங்களை களமிறக்கியது அமைச்சர் ரிசாத் பதியுத்தீனின் தலைமைத்துவம் பற்றி என்ன நினைக்கிaர்கள்?

பதில்:- உண்மையில் எமது சமூகத்துக்குத் தேவையான தலைவர் அவர். முஸ்லிம்களுக்கு எதிராக அநீதிகள் இடம்பெற்ற போதெல்லாம் அவர் தைரியமாக குரல்கொடுத்து வந்திருக்கிறார். பேருவளை கலவரத்தின் போதும் துணிவுடன் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்தார். மஹிந்தவுக்கு எதிராக தைரியமாக ஆட்சியில் இருந்து வெயியேறிய சிறந்த தலைவர். அவர் ஒருபோதும் சமூகத்துக்கு துரோகம் செய்யமாட்டார். அவரின் தலைமைத்துவத்தின் சிறப்பின் காரணமாகவும் எனக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

கேள்வி:- கடந்த தேர்தலில் இனவாதம் பரவலாப் பேசப்பட்டது. இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. மு. வெற்றிபெற்று மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகத் தெரிவாகியிருந்தால் முஸ்லிம்களின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்?

பதில்:- மீண்டும் முஸ்லிம்களுக்கு முன்பு ஏற்பட்ட அதே பழைய நிலைமையே ஏற்பட்டிருக்கும். நிம்மதியின்றி வாழும் சூழல் தோன்றியிருக்கும். ஆனால் இறைவனின் முடிவு அவ்வாறாக இ ல்லை. அநியாயக்காரனின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் கஷ்டப்பட இறைவன் ஒருபோதும் இடமளித்திருக்கமாட்டான். ஏனென்றால் முஸ்லிம்கள் நோற்ற நோன்பும் கேட்ட துஆவும் ஒரு போதும் வீண் போகாது. அதனாலேயே அவர் தோற்றார்.

3 comments:

  1. இசாக் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ISHAK UDAYA NIYATHAI ALLAH KABOOLSEYWANAHA

    ReplyDelete

Powered by Blogger.