Header Ads



Jaffna Muslim இணையத்தில் பின்னூட்டம், பதிபவர்களின் கவனத்திற்கு...!

ஜப்னா முஸ்லிம் இணையமானது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து, எழுத்து சுதந்திரத்தை மதிக்கிறது. ஆரோக்கியமான கருத்துக்கள் அத்தியாவசியமானவை. அதேபோன்று ஒரு பொறுப்புமிக்க சமூக ஊடகமென்ற வகையில் பின்னூட்டம் பதிபவர்களும் தமது பொறுப்புகளை உணர்ந்து கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

எந்தவைகயிலும், தனிப்பட்ட ஒருவரையோ அல்லது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ ஜப்னா முஸ்லிம் இணையம்  போன்ற சமூகப் பொதுத் தளத்தில் பதிவிட வேண்டாமமென கூறவிரும்புகிறோம். 

உங்களுடைய பின்னூட்டங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் அனுமதிக்கபட்டவில்லை என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

பின்னூட்டத்தை ஏன் அனுமதிக்கவில்லை என, யாருக்கும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது பொதுவாகவோ கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக ஜப்னா முஸ்லிம் இணையம் கூறவரும்புகிறது.


6 comments:

  1. உண்மையிலேயே பக்கச் சார்பின்றி நியாயமான காரனத்திற்காக ஒரு பின்னூட்டம் அனுமதிக்கப் படவில்லை ஏற்னால் அது நியாயம்தான், அதே நேரம் அதையே சாட்டாக வைத்து சில பிடிக்காத விடயங்களை ஜப்னா முஸ்லிம் பேசுவதை தடுக்கக் கூடாது.

    கருத்துச் சுதந்திரம் என்பதற்குள் ஜப்னா முஸ்லிம் கை வைக்கக் கூடாது.

    உதாரணமாக, கோத்தபாய, விமல் வீரவன்ச குறித்து எழுதப்படும் பின்னூட்டங்களை அனுமதித்துவிட்டு, அதே பாணியில் குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் அரசியல்வாதி, அல்லது பொது வாழ்வில் உள்ள நபர் குறித்து எழுதப்படும் பின்னூட்டத்தை அனுமதிக்காமல் விட்டால் அது தவறாகும்.

    நன்றி.

    ReplyDelete
  2. ஜப்னா முஸ்லிம் நிர்வாகத்திற்கு ஒரு அறிவுரை,

    கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வீழ்ந்து இருந்த உங்களின் இணையத்தளம், மீண்டும் புகழ்பெற்று வருகின்றது என்றால், உங்களின் சிம்பிளான வடிவமைப்பு, குறைவான விளம்பரங்கள் என்பவற்றுடன் முக்கியமான காரணி நீங்கள் பின்னூட்டங்களை அனுமதிக்க ஆரம்பித்து உள்ளமை ஆகும்.

    பின்னூட்டங்களே தற்பொழுது உங்களின் தனித்துவத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஆகவே யாரோ தரும் அழுத்தங்களுக்காகவோ, அல்லது பிழையான ஆலோசனைகளைக் கேட்டோ நீங்கள் பின்னூட்டங்களில் அதிகம் கட்டுப்பாடு போட்டால், அது வாசகர்கள் மத்தியிலான உங்கள் வளர்ச்சிக்கு பாதிப்பாக அமைந்துவிடும்.

    சிந்தித்து செயலாற்றுங்கள்.

    பின்னூட்டங்கள் உடனுக்குடன் வெளியாகும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. Yaseer Sameen உடன் 100 இக்கு 100 வீதம் உடன் படுகிறோம். பின்னூட்டல்கள் விரைவாக பதிவேற்றம் இடப்படுமானால் அது மிகவும் நடுநிலை தன்மையை உறுதிப்படுத்தும்.

    ReplyDelete
  4. Jaffna muslim always allowed commence

    ReplyDelete
  5. வாசகர்களின் நியாயமான கருத்துக்கள் பாதிக்கபடாத வகையில் உங்கள் வடிகட்டல் அமையட்டும். கருத்துக்களை உடனுக்குடன், குறைந்த பட்சம் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவையாவது அனுமதித்தால் நன்றாக இருக்கும்.

    பல மணி நேரம் கழித்து அனுமதிக்கும் பொழுது, ஆரிய கஞ்சியாக மாறிவிடவும் கூடுமல்லவா?

    ReplyDelete

Powered by Blogger.