Header Ads



"வெளிநாட்டில் வாழும் வாலிபர்கள்"

-M.JAWFER JP-

உலகில் வளர்முக நாடுகளான மூன்றாம் மண்டல நாடுகளில் இருந்து பொருளாதார மேம்படுத்தலின் நோக்கத்தோடு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பல மேற்கத்திய நாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலைமையில் நம்மவர்கள் செல்கின்றார்கள்.

இதில் பல தரப்பட்ட வயதுடையவர்களும் அடங்குவர். திருமணமாகி பல பிள்ளைகளின் பெற்றோர்கள், பிள்ளைகள் இல்லாத பெற்றார் என்ற அந்தஸ்தை அடையாத இளம் வயது திருமணம் செய்தவர்கள், திருமணம் செய்யாத வாலிபர்கள், இவ்வாறாக பலதரப்பட்டவர்களும் தொழிலின் நிமித்தம் செல்வது ஒரு மரபுப்பழக்கமாக மாறிவிட்டது. இதில் ஆண்கள் வருவதில் தப்பில்லை என்ற கருத்தை நம்மில் பலர்விரும்பும் அதே நேரம் பெண்கள் வருவதை சகலதரப்பினரும் விரும்பவில்லை என்பது கசப்பான உண்மை.

நாம் பெண்களை வெளிநாடு வருவது தவறாக சித்தரிக்கும் அதே நேரம், இளம் வயது வாலிபர்கள் வெளிநாடு சென்று வழிதவறி சீரழியும் நிலைமை ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற கேட்க பார்க்க யாரும் இல்லை தான் தோன்றித்தனமாக வாழும் அவல நிலை ஏற்படும் அபாயமே தோன்றுகிறது.

இதில் தன்னோடு வேலை செய்யும் சக ஊழியர்கள் தன்னுடைய ஊரை சேர்ந்தவரோ, தன்னுடைய நாட்டை சேர்ந்தவரோ இல்லை என்பதுதான் இதற்க்கான மிகப்பொருத்தமான காரணமாக இருக்கிறது. முதலில் பேச்சுப்பழக்கத்தில் அதிகமான சீர்கெட்ட சொற்பிரயோகங்களை பழகுவது உடன் இருந்து சினிமா படங்கள் பார்ப்பது, தான் நாட்டில் பாவிக்காத சில சிறிய வகை புகைப்பழக்கங்கள், தம்பாக்கு, பான்பராக் போன்ற சில கெட்ட பழக்க வழக்கங்களை பழகிக்கொள்வதோடு நாம் அன்றாடம் இஸ்லாமியர்களாக இருந்து செய்யக்கூடிய மார்க்கக் கடமைகளைகூட செய்வதற்கு உணர்வற்ற ஒரு அவல நிலைகளையே காண்கிறோம்.

 பல மணி நேரங்கள் பேஸ்புக் பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும் செலவு செய்யும் நாம்  சற்று சிந்திக்க வேண்டும் நாம் ஒரு முஸ்லிம் நமக்கென்று சிலபல கடமைகள் இருக்கிறது என்பதை. இதில் வேடிக்கை என்னவென்றால் வாலிபர்களோடு சேர்ந்து வயதானவர்களும் பல பிள்ளைகளின் பெற்றாராக இருக்கும் சிலரும் சினிமா பார்ப்பது இஸ்லாம் அனுமதிக்காத பிரயாணங்கள் மேற்கொள்வது வாலிபர்களோடு சேர்ந்து தகாத வார்த்தைகளை எல்லாம் பேசுவது மிகக்கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியுள்ளது.

நம் நாட்டை சேர்ந்தவர்கள், நம் இனத்தை சேர்ந்தவர்கள் இவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு வயது வந்த இஸ்லாமியருக்கும், படித்தவர்களுக்கும் சமுகம் பற்றிய அக்கறையுள்ள அனைவர்களின் மீதும் கடமையாக இருக்கிறது.


இதில் சிலர் சில அரபிகள் செய்யும் சில தவறுகளை உதாரணம் காட்டி அவர்கள் செய்யும் போது  நாம் ஏன் செய்ய முடியாது இந்த அரபிகளுக்கு தெரியாத விடயமா இவர்களுக்கு தெரியும் என்று, தான் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பிக்க வருவது. வெண்நிறத்தில் நீண்ட உடையணிந்து அவர்கள் பாவம் செய்தால் அதை இஸ்லாம் அங்கிகரிக்குமா? நமக்கும் அல்லாஹ் அறிவை தந்திருக்கிறான் நாமும்  சிந்திக்க வேண்டும் செயல்பட வேண்டும் நம்மை தான்தோன்றித்தனமாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ இஸ்லாமல் இடம் கொடுக்காது என்பதை புரிந்து நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக அமீன் .  
     

1 comment:

Powered by Blogger.