Header Ads



ரணில் கையொப்பமிட்டால், அதனை எதிர்ப்போம் - அமைச்சர் சம்பிக்க எச்சரிக்கை

இந்திய- இலங்கை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமான சீபாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டால் அதனை எதிர்க்கப் போவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது சீபா ஒப்பந்தம் தொடர்பான கைச்சாத்திடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறு நடைபெற்றால் அது தவறான செயலாகும். ஏனெனில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை அமைச்சரவையின் அனுமதி வழங்கப்படவில்லை.

இரு நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மூலம் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். தவிர அது தொடர்பான எந்தவொரு முடிவையோ, ஒப்பந்தத்தையோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனித்து ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

இந்தியா எமது நட்புறவு நாடு, அங்கு எமது உற்பத்திகளுக்கு ஏராளம் சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன என்பது போன்ற விடயங்களுக்காக எமது நாட்டின் வர்த்தகர்களின் நலனை நாம் தாரை வார்த்துவிட முடியாது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Ranil mr pota plan padi seywaru mindum Mr government vasam adikuthu ranil konjm perli carefully

    ReplyDelete

Powered by Blogger.