Header Ads



"இந்துவா"விடமிருந்து அருமைத் தந்தை, மகிந்தவுக்கு ஒரு கடிதம்...!

 (Jaffna Mauslim இணையத்திற்காக தமிழில் J.A.manaff)

"நீ எங்கோ வழி தவறிவிட்டாய் என் அருமைத் தந்தையே..."

உள்வாங்கிய மூச்சை வெளிவிட முடியுமா என்ற நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலை அன்று எமக்கிருந்த அந்த இக்கட்டான கட்டத்திலும் யுத்தத்தின் மூலம் நன்மையடைந்த பல ஆட்சியாளர்களுக்கு மத்தியில் நீ எனக்கு மகா வீரனாகத் திகழ்ந்தாய் என் அருமைத் தந்தையே! உலகத்துக்கே ஓர் அச்சுறுத்தலாக இருந்த அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நீ சொன்னபடி மற்றவர்களோடு சேர்ந்து என் இடுப்புப் பட்டியை நானும் இறுக்கிக் கொண்டேன் என் அருமைத் தந்தையே! அந்த நாட்களில் இரவு 7 மணிக்கு Tv பார்க்கின்ற போது ஒரு   Action Film பாரப்பதைப் போன்று என் உணர்வுகள் இருந்தன என் அருமை தந்தையே! எமது சிங்கக் குட்டிகள் வெடிச்சத்தங்களுக்கு மத்தியில் முன்னேரிச் செல்கின்ற பயணத்தில் நான் மிகவும் விரும்பியது எமது தேசப்படத்தில் புலிகள் இருந்த இடங்களை நிறந்தீட்டித் தீட்டி அது நாளுக்கு நாள் குறைவடைகின்றதை பார்ப்பதற்குத்தான் என் அருமைத் தந்தையே!

கோடைக் காலம் முடிவடைந்து வசந்த காலம் ஆரம்பிப்பது போல் LTTE அமைப்பை முற்றாக அழித்த பெரு மகிழ்ச்சியில் பலகாரம் பாச்சோறு சாப்பிட்டு கொண்டாடியவர்களுக்கு மத்தியில் நானும் இருந்தேன் என் அருமைத் தந்தையே! அந்த மகிழ்ச்சி இன்றும் இந்த சின்ன உள்ளத்தில் அவ்வாறே நினைவில் இருக்கின்றது என் அருமைத் தந்தையே! சொன்னபடியே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அபிவிருத்திக்கு அடித்தாளமிட்ட உனக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் என் அருமைத் தந்தையே! நட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்சென்ற நீ வேலைப்பழு காரணமாக அன்று இறுக்கிக் கொள்ளச் சொன்ன எமது இடுப்புப் பட்டியை தளர்த்திச் செல்வதற்கு உனக்கு மறந்திருக்கலாம் என் அருமைத் தந்தையே! இருந்தாலும் நாம் அதற்கு உன்னுடன் கோபிக்கவில்லை என் அருமைத் தந்தையே!

அவ்வாறே நாட்கள் கழிகின்ற போது நாம் என்றுமே கண்டிராததும் கேள்விப்படாததுமான உன் சகோதரர்கள் வந்து, உனது கைகளை பலப்படுத்துவதற்கு முயற்சித்த முறைகளை ஒரு புறமாக இருந்து நானும் அவதானித்துக் கொண்டிருந்தேன் என் அருமைத் தந்தையே! கல்விக்கும் தகைமைக்கும் இடமளிக்காமல் தேர்தலை மாத்திரம் நோக்காகக் கொண்டு நடிகர் நடிகைகளின் குழுவொன்றை தியவன்னாவுக்கு  ளாழழவiபெ செல்வதை அவதானித்த ஒரேயொரு ஆள் நான் மாத்திரமல்ல என் அருமைத் தந்தையே! இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் இருப்பதற்கு உன் ஆலோசகர்கள் உனக்குக் கற்றுத்தந்த நாட்டுப்பற்றுக் கதை மற்றும் உடலசைவுக்கு நாட்டில் ஏனையவர்களுடன் நானும் வசியப்பட்டிருந்தேன் என் அருமைத் தந்தையே! மார்பில் தட்டித் தட்டி தலையை உயர்த்தி தமிழில் கொட்டிய வார்த்தைகள் எனக்கு விளங்காவிட்டாலும், அவ்வாறான நடிப்பின் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகள் மூடிமறைக்கப்படுவதை உணர்ந்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் எனக்கும் காலம் எடுத்தது என் அருமைத் தந்தையே!

எல்லாமே மாறுகின்ற உலகிலே, எனது உலகில் ஓர் அரசனைப் போல் இருந்த நீ எங்களுக்கும் களவில் மாறினாய் என் அருமைத் தந்தையே! சிங்கத்தைப் போல் பேசிய உனது வாயாலே, உன்னைச்சுற்றியிருந்த நரிகளின் சொற்களும் வெளிவரலாயின என் அருமைத் தந்தையே! என்றுமே எவருக்கும் சேறுபூசாத நீ மற்றவர்களுக்கு சேறுபூசுமளவுக்கு சீறழிந்ததை கண்டவன் நான் மாத்திரமல்ல என் அருமைத் தந்தையே!

தந்தையுடன் தந்தையின்  உhயnநெட களில் நாமும் புதுவருடம் கொண்டாடினோம், உபதேசங்கள் செவிமடுத்தது உனக்கும் ஞாபகம் இருக்கும் என் அருமைத் தந்தையே! 10 வருடங்கள் அதனைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனது எனக்கு மாத்திரமல்ல என் அருமைத் தந்தையே! வருடப்பிறப்பின் போது குரக்கன் பாற்சோறு, குரக்கன் கொகிஸ், குரக்கன் அலுவா, குரக்கன் பலகாரம் கேட்டு கண்டு புலித்துப்போனது எனக்கு மாத்திரமல்ல என் அருமைத் தந்தையே! போயா தினத்தில் போதி மாதவனின் உரைகளை செவிமடுக்க  Tv யை துவக்கி நாம் எப்போதும் செவிமடுத்தது நடப்பு ரீதியான உரைகளையாகும் என் அருமைத் தந்தையே! அதனை செவிமடுத்ததும் உனக்கு ஆதரவான பன்சலைகளிலிருந்து மாத்திரமேயாகும் என் அருமைத் தந்தையே!

பெருமிதத்துடன் துவாயை போத்திக் கொண்டு, நாமல் பேபி அரசியலுக்கு வந்தார் என நீ கொடுத்த pசழஅழவழைn சிறப்பாக இருந்தது என் அருமைத் தந்தையே! யுத்தத்தின் உச்ச கட்டத்தில் பெரிய பேபியை கடற்படைக்கு அனுப்பி hiபா ளிநநன இல் pசழஅழவழைளெ எடுக்க போனதால் யுத்தத்தில் முன்னே செல்வதற்கு அவருக்கு நேரம் இருந்திருக்காது என் அருமைத் தந்தையே! எனினும் நேறள களில் யுத்தத்தை காண்பித்த போதெல்லாம் துப்பாக்கியைத் தோலில் சுமந்து கொண்டு புலிகளின் வாய்க்கருகில் ஓடிய வீரர்களின் முகங்களுக்கு மத்தியில் பெரிய பேபி இருக்கின்றாரா? என ஆவலுடன் பார்த்தது நான் மாத்திரமல்ல என் அருமைத் தந்தையே! பின்னர் சின்ன மகன் ஏதோ ஒன்றை விண்ணுக்கு அனுப்பினாராம் இல்லையா என் அருமைத் தந்தையே! அதன்பின்னர் அது எங்கள் வீட்டு முற்றத்தில விழுந்துள்ளதா? என முற்றத்தை துப்பரவு செய்யும் போதெல்லாம் நான் தேடினேன் என் அருமைத் தந்தையே! உண்மையில் இப்போது அது எங்கே இருக்கிறது என் அருமைத் தந்தையே!

சிறுவனான எனக்கு அந்த பெரிய பெரிய கதைகள் பற்றிய அறிவெல்லாம் எனக்கில்லை என் அருமைத் தந்தையே! எனினும் இத்தகைய காண்கின்ற கேட்கின்ற விடயங்கள் வெறுத்துப் போய் மாற்றம் ஒன்று தேவை என்பது எனக்கு மாத்திரமல்ல என் அருமைத் தந்தையே! ஆறு வருடங்கள் இருப்பதற்கு இருந்த சந்தர்ப்பத்தை 8ஆக அதிகரிப்பதற்கு நீ எடுத்த முயற்சி 2 வருடங்களுக்கு முன்னரே கேட்டு வாங்கிக்கட்டியது நானல்ல என் அருமைத் தந்தையே! இரு முறைக்குரிய ஆட்சியை 3 முறைக்கு மாற்றிக் கொண்டது, வெற்றி பெற்ற நாட்டை பாதுகாப்பதற்கே என நான் சமாளித்துக் கொள்கின்றேன் என் அருமைத் தந்தையே! எனினும் உனக்கு எங்கோ வழி தவறிவிட்டது என் அருமைத் தந்தையே! உனக்கு விளங்காவிட்டாலும் உன்னைச் சுற்றியுள்ள வண்டுகள் உன் சாற்றை உறிஞ்சிக் குடித்தது என் அருமைத் தந்தையே! தங்கப்பந்துகளைப் பிசைந்து பிசைந்து பேயோட்டிகள் சிலருக்கு நீ நாட்டின் எதிர்காலத்தைக் காட்டிக் கொடுத்தாய். நாங்கள் அது பற்றிப் பேசிய போதெல்லாம் எம்மவரே எங்களைப் பேசத்தொடங்கினர் 'சிங்களவர் மிக விரைவில் செய்நன்றி மறப்பவர்கள்' என்று. ஆயினும் செய்நன்றி மறந்தது நீதான் என் அருமைத் தந்தையே! யுத்தத்தை வெற்றி கொண்டதால் நாம் உன்னை வெற்றியடையச் செய்தோம் என் அருமைத் தந்தையே! அதனால்தான் நீ மீண்டும் தலைவராக மாறினாய் என் அருமைத் தந்தையே! அதன் பின்னர் நீதான் எங்களை மறந்தாய் என் அருமைத் தந்தையே! அப்படிச் செய்த நீயும் ஒரு சிங்களவர் என் அருமைத் தந்தையே! அன்று இறுக்கிக் கொண்ட இடுப்புப் பட்டியால் குருதி வடியுமளவுக்கு எமக்கு காயம் ஏற்பட்டுள்ளது என் அருமைத் தந்தையே! பராவாயில்லை  யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதுதானே என பொறுமையுடன் இருந்தது நான் மாத்திரமல்ல என் அருமைத் தந்தையே!

கால மாற்றத்தினால் எமக்கு புதியதொரு தலைவர் கிடைத்துள்ளார் என் அருமைத் தந்தையே! அந்தத் தலைவரின் பாரியாரின் முகம் கூட எனக்கு ஞாபகமில்லை. பிள்ளைகளின் பெயர் கூட எனக்கு ஞாபகமில்லை. அந்த தந்தையைப் போல அந்தத் தலைவர் pசழஅழவழைn செய்வதில்லை என்பதால் பொய்ச் சோபனம் இல்லாததே எனக்குப் பெரு மகிழ்ச்சியளிக்கின்றது என் அருமைத் தந்தையே!

விரைவில் புதிய பாராளுமன்றம் தொடங்குகின்றது என் அருமைத் தந்தையே! உன்னால் வெற்றி பெற்றவர்கள் உன்னருகிலே அமர்வார்கள். அதிமேதகு எனக் குறிப்பிட்ட வாயினாலே சாதாரண உறுப்பிர் எனக் குறிப்பிடுவர். உன் வாயாலே ஏசியவர்களுக்கு முன்னால் நீ தலைசாப்பாய் என் அருமைத் தந்தையே! அப்போதாவது உனக்கு விளங்கும் என் அருமைத் தந்தையே! நீ எங்கேயோ வழி தவறிவிட்டாய் என் அருமைத் தந்தையே! எமக்கு உன்மீது தனிப்பட்ட கோபம் ஏதுமில்லை என் அருமைத் தந்தையே! இன்றும் நாம் அனுபவிக்கின்ற சுதந்திரம் உன்னால் கிடைத்ததாகும். அதனை மரந்தல்ல நாம்  உனக்கு எதிராக நிற்பது. கட்டுக்கதைகளை நம்புதல், தகாத நண்பர்களின் உறவு என்பவற்றுக்கு உட்பட்டு எனது மஹிந்தவை எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதனாலாகும். யுத்தம் மீண்டும் எழுந்தால் அன்றைக்கு நாம் அதனைப்பற்றிப் பார்ப்போம் என் அருமைத் தந்தையே! நாடு இரண்டாகப் பிளவுபட்டாலும் அதனையும் அன்றைக்குப்பார்த்துக்கொள்வோம் என் அருமைத் தந்தையே! அப்போது நாம் உன்னுடன் இருப்போம் என் அருமைத் தந்தையே! அன்றைக்கு அந்த தங்கப்பந்துகள் இரண்டையும் பேயோட்டிகளையும் கெட்ட நண்பர்களையும் விட்டு விட்டு வா என் அருமைத் தந்தையே! மீண்டும் யுத்தம் ஒன்று வந்தால் நான் ஒரு தற்கொலைதாரியாக வந்து பயங்கரவாதிகளுக்குள் பாய்வேன். எனவே தற்போது எங்களுக்கு ஆதரவாக முதலைக் கண்ணீர் வடிப்பதை விட்டு விட்டு மற்றவர்களுடன் இணைந்து எங்களுக்கும் நாட்டுக்கும் தவறுவிடப்பட்ட இடங்களை அறிந்து கொள்வோம் என் அருமைத் தந்தையே!

இப்படிக்கு நான் உனது முன்னை நாள் மகன்
இந்துவா

No comments

Powered by Blogger.