Header Ads



இன்னும் ஐந்து, பத்து ஆண்டுகளில் ஆபத்துக்கள் - ஞானசாரர்

இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலக்கு வைக்கப்படுவதனை தடுக்க வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளா கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தரப்புக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வேட்டையாடப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டத்தை மதித்து செயற்படும் இலங்கை இராணுவப் படையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சில வெளிநாட்டு சக்திகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சட்டத்தை மதித்து செயற்படும் இராணுவப் படையினரை கொலையாளிகளாக அடையாளப்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவிதமான விசாரணைகளும் இன்றி சில இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களும், நாட்டுக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்களும் தற்போது நாட்டுக்குள் பிரவேசித்து தங்களது நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது நல்லாட்சிப் பற்றி பேசி வரும் தரப்பினர் இன்னும் ஐந்து பத்து ஆண்டுகளில் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் என்ற ரீதியில் புலனாய்வு உத்தியோகத்தர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் இதனால் யார் நன்மை அடைகின்றார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியேற்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. கௌரவ ஜனாதிபதியும் கெளரவ பிரதமரும் இந்த போதுபல சேனாவை ஒழித்து கட்டவில்லை என்றால் இன்னும் ஐந்து பத்து வருடங்களில் மிகப்பரிய இனக்கலவரம் ஏற்ப்படும்.யாராலும் தடுக்க முடியாமல் போய் விடும்.எல்லாக்காலமும் சிருபான்மையினை தலையை குனிந்தது கொண்டு இருக்க மாட்டார்கள் என்பதையும் அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்.எத்தனை வருடத்துக்கு இளைஞர்களை கட்டுப்படுத்துவது ..முஸ்லிம் அமைச்சர்கள் இந்த விடயம் சம்மந்தமாக அரசிடம் முன் வைக்கப்படவேண்டும்.தொடர்ந்து இந்த பிரச்சினையை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

    ReplyDelete
  2. மகிந்தவின் ஆட்சியில் எப்படி இருந்தாய் ராஜாவே! இப்போது உனது கருத்தை யாரும் எடுப்பதில்லை. எதையாவது கத்திதக் கத்தி இருக்க வேண்டியது தான். பௌத்த மக்கள் உனக்குத் தந்த பாடம் புரிகிறதா இப்போதாவது?

    ReplyDelete
  3. Bro Mustafa Jawfer ! BBS irundathal thaan Ranil kkum , my3 Kkum kathirai kidaithathu. So avarhalin arasiyal parvaiyil racist people irukkavum vendum appathan avarhalukku Kai nahartha mudiyum! Aathalal bbs pondra amaippuhalai mutraha olikka mattarhal.
    Election kaalathil adakkuvathu pol pasangu mattum seivarhal

    ReplyDelete
  4. Animal should gun down even intelligent animal

    ReplyDelete
  5. Evar eppadi eranuwathukaga eppo kuralkoduppathu ethukkendral mahinda rajapkas yum gouverment kooda serthuttaru eppa avarukku ena kalavaratha etpadutha yarum help ku ella so mamppu ellarum serthu vaikka porangal appu ethuthan unami raja

    ReplyDelete
  6. இந்த வகையில் இவனும் மஹிந்தவும் ஒரே குட்டையில் ஊறியவனுகள்,, பதவிக்காகவும் புகழ் சேரவேண்டும் என்பதற்காகவும் ...ஏதாவதொன்றை இழுத்துக்கிட்டே இருப்பானுகள்..கொட்டத்தை அடக்கி, நசுக்காத வரை...,

    மாறாக ,அனேக சிங்களவர்கள் நல்லவர்கள் ( தேர்தலிலும் தோலுரித்து காட்டிவிட்டார்கள் )

    ReplyDelete
  7. a weeping nation is sitting at the altar of religious faith and racial superiority like helpless children and a bundle of forlorn humanity. leaders would not only look the other way, they will intentionally misguide them for their own use. a hapless caravan of human garbage will tread its weary way until the end comes and the end will be utterly destructive and the effects harsh. ( i am not sure who wrote this but i found this brilliant piece in a newspaper during aluthgama violence )

    ReplyDelete
  8. Dogs used bark but Moon used to keep calm...

    Let it continue without leaving path to destruction...

    ReplyDelete

Powered by Blogger.