Header Ads



மக்காவில் வபாத்தானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு


புனித மக்கா ஹரம் ஷரீபில் நேற்று இடம்பெற்ற விபத்தில், இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் சவுதி அரேபியாவின் புனித மக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலான ஹரம் ஷரீபில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதுடன் 230 பேர் வரை காயமடைந்துள்ளனர் 

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கானவர்கள் புனித மக்கா நகருக்கு வருகை தந்துள்ளனர். 

இந்த நிலையிலேயே நேற்று வீசிய கடும் காற்று காரணமாக இந்த கிரேன் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

4 comments:

  1. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ”இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்நுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் ழூழ்கி இறப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள்”.
    என அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்…. ஸஹீஹ் புகாரி: 653

    ReplyDelete
  2. Innalillahi wainna ilaihi rajiyoon

    ReplyDelete
  3. Innalillahi wainna ilaihi rajiyoon May Allah accept them ,,& Grant them jennathul firdous ameen

    ReplyDelete
  4. ஒருவன் இறைவனுக்கு இணைவைப்பவனாக இருந்து தண்ணீரில் மூழ்கி இறந்தால்..?

    Tru with proof கூறுவது உண்மையா..? அது அவ்வாறிருந்தாலும் அதுகூட திரிபுகளாகவோ இடைச்செருகலாகவோதான் இருக்க வேண்டும் என்பதால் நம்புவதற்கில்லை.

    ReplyDelete

Powered by Blogger.