Header Ads



மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட சதியினால், தேர்தலில் நான் தோல்வியுற்றேன் - S.P.

சிலரின் சூழ்ச்சியான நடவடிக்கை காரணங்களினால் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்தில் நியமிக்கின்றமை தவறல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரிய அளவிலான மக்கள் ஆதரவினை கொண்டிருந்தும் சில வேட்பாளர்கள் சிலரின் சூழ்ச்சிகள் காரணமாக தேர்தலில் தோல்வியடைந்து விட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற நான் உள்பட பெரும்பாலானவர்களுக்கு முன்னைய காலங்களில் பெரும் வாக்கு வங்கி இருந்தது. ஆனாலும் மஹிந்த தரப்பினர் தேர்தலின் போது மேற்கொண்ட சதி நடவடிக்கைகள் காரணமாக கடந்த தேர்தலில் எங்களின் வாக்குகள் குறைந்தது.

எனினும் தேசியப் பட்டியல் மூலமாக என்னை நாடாளுமன்ற உறுப்பினராக கட்சி தீர்மானித்த போது அதனை ஏற்றுக் கொண்டேன். கட்சியின் தீர்மானப்படி அமைச்சுப் பதவிகள் கிடைத்தாலும் அதனையும் ஏற்றுக் கொள்வேன்.

தற்போதுள்ள அரசியல் சூழலில் ஐக்கிய மக்கள் சுதந்திரர முன்னணியின் ஏனைய கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கக் கூடிய சூழல் இல்லை.

அதனை அக்கட்சிகள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் என்றும் எஸ்.பி. திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. " எவனை பலி கொடுத்தாவது எனக்கு பதவிகிடைத்தால் போதும் நான் அமெரிக்க ஜனாதிபதி யாவதற்கும் தகுதி படைத்தவன்" என சேர்த்துக்கொள்ளவும்

    ReplyDelete
  2. தேர்தல் நடத்துவது வெற்றி தோல்வியை சுலபமாக கண்டுகொல்வதர்காகத்தான் தோல்வி கண்ட கல்வர்கலல்லாம் தேசிய பட்டியலில் கட்சித்தலைவர்கள் நியமித்தால் ஜனநாயகம் என்று சொல்லும் மக்கள் தீர்ப்புக்கு என்ன முடிவு. S P திசாநாயக U N P யில் இருந்து எவ்வலவு கலவடுக்க முடியுமோ அவ்வளவையும் களவடுத்து விட்டுதான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்தது அதன் பிறகு ஆட்சி மாறியவுடன் சந்திரிகாவுடன் பிரச்சினை போட்டுக்கொண்டு மீண்டும் U N P பக்கம் பாய்ந்தது இங்கும் ஆட்சி மாறியவுடன் மீண்டும் மஹிந்த பக்கம் பாய்ந்தது .இப்படிப்பட்ட ஒரு கட்சி தாவி தன தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஒரு சுயநல வாதியை மக்கள் தோற்கடித்து இருந்தும் இவருக்கு தேசிய பட்டியலில் சேர்த்திருப்பது ஜனநாயகத்தை நம்பிய மக்களின் நெஞ்சில் மிதித்து இருப்பது மறக்க முடியாத செயற்பாடு .ரணிலை தூத்தினர் பின் சந்திரிகாவை நிர்வாணமாக தொலைக்காட்சியில் காட்டுவோம் என்று சொன்னார் அண்மையில் நடந்த தேர்தல்களில் மஹிந்தைக்கும் மைத்திரிக்கும் இடையில் மாறு வேடம் போட்டுக்கொண்டு நடித்துக்கொண்டு பட்டும் படாமலும் இருவரையும் தூத்தினார் .இப்போ மைத்திரியிடம் தஞ்சமடைந்துட்டு மஹிந்தயை குறை கூறுகிறார்.எப்ப மைத்திரிக்கும் இவருக்கும் இடையில் கச்சேரி குலம்புதோ அப்ப மைத்திரியையும் எந்த தொலைக்காட்சியில் எப்படி காட்டுவம் என்று சொல்வாரோ தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.நிச்சயமாக குழம்பும் இவர்களின் கச்சேரி . .

    ReplyDelete

Powered by Blogger.