Header Ads



'முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பு' உருவாகிறது - SLMC + ACMC க்கு அழுத்தம் கொடுக்க திட்டம்..?


முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மு.காவுக்கு முன் (1986) மு.காவுக்குப் பின் என இரண்டாகக் கருதமுடியும்.

மு. கா. வுக்கு முன் (1986) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஊர், ஊராகப் பிளந்து வேறுபட்டுக்கிடந்தன. இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் ஊருக்கு ஒரு எம்.பி. என்ற கோஷங்களே முன்வைக்கப்பட்டன. அதிக சனத்தொகை, பண பலம், கல்வி, குடும்ப ஆதிக்கம் நிறைந்த ஊர்கள் எம்.பியைப் பெற முயன்று ஒவ்வொரு தேர்தல்களிலும் எம்.பி.யைப் பெற்றன. கிழக்கில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரசேதங்கள் இவ்வாறு நீண்ட காலம் ஊரின் எம்.பி.யை தக்கவைத்துக் கொண்டன. முன்னாள் அமைச்சர்களான ஏ. ஆர். எம். மன்சூர், பி. ஏ. மஜீத், முஸ்தபா ஆகியோர் இவ்வூர்களின் மன்னர்களாகவும், கதாநாயகர்களாகவும் திகழ்ந்தனர்.

1986 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் உதயமானதுடன் தொகுதி வாரி தேர்தல் வழக்கொழிந்து விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானது. மு.காவின் முதலாவது தேர்தல் களம் விகிதாசார முறையாக இருந்தது. எனவே இத்தேர்தல் முறையைக் கச்சிதமாக பயன்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ் விகிதாசார முறையைப் பயன்படுத்தி பிரதேசவாத சிந்தனைகளை ஒழிக்கவும் முஸ்லிம்களை சமூக ரீதியில் ஒன்றிணைக்கவும் பிரசாரங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டது. 1986 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவிய அரசியல், இராணுவப் பின் புலங்களும் முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் அணிதிரட்ட உதவியது.

வடக்கு, கிழக்கில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினூடாக தீர்வு கிடைக்கும் போது முஸ்லிம்க ளுக்கும் தீர்வைப் பெற்றுத் தருவோமென்று முஸ்லிம்களை விழித்தெழச் செய்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மற்றும் தவிசாளர்களான அஷ்ரஃப், ஷேகு இஸ்ஸதீன் ஆகியோரின் பிரசாரங்கள் முஸ்லிம் ஊர்களுக்கிடையேயிருந்த பிரதேசவாத சிந்தனைகளை அடியோடு இல்லாமற் செய்தன.

பிரதேசவாதத்தை ஒழிப்பதற்கு மத உணர்வுகள். அறிவுரைகள் புனித குர்ஆன் கூறும் ஒற்றுமை பற்றிய அறிவுரைகளும் மு. கா. மேடையில் முழங்கப்பட்டது. இந்நிலைமை மு.காங்கிரஸில் எங்காவது எம்.பி கிடைத்தால் போதும் என்ற மனநிலையையும் சமூக உணர்வையுமே முஸ்லிம்களிடத்தில் வளர்த்ததுடன் கல்முனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, அளுத்கமை, அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி என்ற பிரதேச வாதங்களையும் இல்லாமற் செய்து. இதனால் அப்§¡தைய நிலைமையில் (1986 - 1994) வரை முஸ்லிம் காங்கிரஸ¤க்கு தேசியப்ப ட்டியல் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இதனால்தான் 1989 ஆம் ஆண்டு கொழும்பைச் சேர்ந்த புஹார்தீன் ஹாஜியாருக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு அஸித பெரேரா என்ற சிங்கள சகோதரருக்கும் மு. கா. தேசியப் பட்டயலை வழங்கியது.

இந்நேரங்களில் எவ்வித பிரச்சினைகளும் மு. காங்கிரஸ¤க்குள்ளோ. முஸ்லிம் கிராமங்களிலோ ஏற்படவில்லை. ஸ¤ஹைர், இல்யாஸ் ஆகியோருக்கும் மு.கா. தேசியப் பட்டியலை வழங்கி சமூகத்துக்கான இருப்பையும் போராட்ட குணாம்சங்களையும் வளர்த்தெடுத்தது என்பதே உண்மை. ஆனால் 2000 ஆண்டுக்குப் பின்னர் மு.கா. உடைந்து சிதறி பல முஸ்லிம் கட்சிகள் உயிர் வாழ்ந்தாலும் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் மு.காவும்.

ம. கா.வுமே முஸ்லிம் சமூகத்துக்கான கட்சிகளாக எஞ்சி நிற்கின்றன. இவ்விரண்டு முஸ்லிம் தலைமைகளும் வாக்காளர்களை கவர்ந்திழுக்க பிரதேசவாதம், தேசியப் பட்டியல் என்பதையே மந்திரிக்குமளவுக்கு வந்துள்ளன. இதற்கான காரணங்களை மிக ஆழமமாக ஆராய வேண்டியுள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்னர் இதற்குரிய முதலாவது விடையும் கையில் கிடைத்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்புக்கான பிரச்சினை, தீர்வுகள் குறித்து மு. கா., ம. கா. தலைமைகளிடம் தெளிவான சிந்தனையில்லை. இணைந்த வட கிழக்கிலா முஸ்லிம்களுக்கு தீர்வு அல்லது கிழக்கைப் பிரிப்பதிலா முஸ்லிம்களுக்கு அரசியல் பலம் என்பதை இவ்விரு தலைமைகளும் தெளிவாகச் சொல்லவில்லை.

தெரியாததால் சொல்லவில்லையா சொன்னால் பிரச்சினை என்று மறைக்கின்றார்களா? அதுவும் முஸ்லிம்களுக்குப் புரியவில்லை. இப்பிரச்சினைகளையும். தீர்வுகளையும் வெளிப்படையாக ம. கா.வும், மு. கா.வும் முன்வைத்திருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் சென்று தேசியப் பட்டியல் தருவதாக சொல்லி வாக்கு கேட்க வேண்டிய தேவை வந்திருக்காது. முஸ்லிம் மாகாணத்துக்காக அல்லது கரையோர மாவட்டத்துக்காக இல்லாவிட்டால் தமிழ் பேசும் சமூகங்களின் ஒன்றிணைந்த நிலபுல எல்லைக்காக வாக்களிக்குமாறு கோரலாம். செலவில்லாமல் தேர்தலில் போட்டியிடும் வழிகள் பல இருக்கையில் கோடிக் கணக்கில் பணம் செலவிட்டு ஊர், ஊராய் தேசியப் பட்டியலுக்கு வாக்குறுதியளித்து வாக்குக் கேட்கும் நிலைமைகள் ஏன் வந்துள்ளன?

முஸ்லிம்களின் தேசியம், சமூகம் சார்ந்த சிந்தனைகளை வளர்க்கவும் பாதுகாக்கவும் தவறியமையால் வந்த வினை விபரீதங்களே இவை. காலப் போக்கில் சர்வதேச தலையீடுகளின் அனுசரணையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படும் போது முஸ்லிம்கள் குறித்து எதை முன்வைப்பது. மு. காங்கிரஸில் செயலாளராகவுள்ள ஹஸன் அலியும், அ. இ. ம. காங்கிரஸோடு நெருக்கமாகவுள்ள ஷேகு இஸ்ஸதீனுமே அஷ்ரஃப்போடு பணியாற்றிய இன்றுள்ள மு.கா.வின் ஸ்தாபக சிந்தனையாளர்கள்.

முஸ்லிம்கள் சார்பான உண்மையான அரசியல் தேவைகள் அதற்கான நிலை யான தீர்வுகளை சர்வதேச மேசையில் முன்வைக்க தமிழர் தரப்பு இதய சுத்தியோடு தான் செயற்படுகிறது. இதனால் மு.கா. மகா தீர்வுகளை முன்வைக்காவிட்டாலும் ஷேகு இஸ்ஸதீன், ஹஸன் அலி ஆகியோரைச் சந்தித்து முஸ்லிம் யோசனைகளை முன்வைக்குமாறு தமிழர் தரப்பு கோரவுள்ளது. நேற்று வியாழக்கிழமை (27) மதீனாபுரம் வந்து ஷேகு இஸ்ஸதீனை சந்திப்பதற்கு தமிழர் தரப்பு உயர்மட்டம் முயன்றதாக செய்திகள் கசிந்துள்ள போதும் சந்திப்பு இடம்பெற்றதா என்பது ஊர்ஜிதமாகவில்லை.

ஹஸன் அலி, ஷேகு இஸ்ஸதீன் ஆகியோரை மையப்படுத்தி அரசியல் சாராத முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பை உருவாக்கி முஸ்லிம் தலைமைகளுக்கு (ம. கா., மு. கா.) ஆலேசானை வழங்கவும் முயற்சிக்கப்படுகின்றன. இதில் பiர் ஷேகுதாவூத், யு. எல். எம். மொஹிதீன் போன்ற முஸ்லிம் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களையும் உள்வாங்க முயற்சிக்கப்படுகின்றன. தேசியப் பட்டியல், அரசியல் அதிகாரங்கள் கோரி சிதறிக்கிடக்கும் முஸ்லிம் கிராமங்கள், ஊர்களை தேசிய, சமூகவாத சிந்தனை. கருத்துக்களில் ஒன்றிணைப்பதே இந்த முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பின் பணியாம்.

காலத்தின் தேவை கருதி இவ்வாறான அமைப்பின் தேவை உணரப்பட்டுள்ளன. முஸ்லிம் புத்திஜீவிகள் இதனை வரவேற்கின்றனர். இரண்டு முஸ்லிம் தலைமைகளையும் (மு. கா., ம. கா.) வழிப்படுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் இனப்பிரச்சினை தீர்வு மேசையில் இந்த முஸ்லிம் தேசிய வாதிகளின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென முஸ்லிம் பூத்திஜீவிகள் விரும்புகின்றனர்.

15 comments:

  1. இதுவும் இன்னுமொரு "சுயநல" , தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான முன்னெடுப்பானால் தயவு செய்து எம் சமூகத்தை சீரழிக்காதீர்கள்

    ReplyDelete
  2. Please stop your nonsense. In politics we don't want anything in Muslim name. Work together with the majority parties while being good Muslims and try to make an effective contribution to build up the country. The society is now fed up of your bullshit ideas.

    ReplyDelete
  3. Please don't try to do anything under Muslim name now. Join with majority parties and try to make an effective contribution to the development of the country.

    ReplyDelete
  4. இப்படியான ஒரு முயற்சிக்கு வர வேண்டிய நிலையில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.அவசரமாக செய்ய வேண்டிய வேலைதான்.ஆனால் இதில் சம்மந்தப்படுத்த்ப்படும் பசீர் சேகுதாவூத்,இஸ்ஸதீன் போன்றோரை இலங்கை அனைத்து முஸ்லிம்களும் ஏற்ற்றுக்கொள்ள மாட்டார்கள்.ஏன் அவர்களின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் முஸ்லிம்கள் ஒரு பக்கமும் அவர்களை சிந்தனைகள் மறு பக்கமுமாக இருந்தது.ஜனவரி எட்டு ஆகஸ்ட் பதினேழு இந்த இரண்டு தேர்தல்களிலும் முஸ்லிம்கள் இவ்வாறு இருந்தார்கள் இவர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.இவர்கள் அதையல்லாம் மறந்து சமூகத்துக்காக வேண்டி முன்வந்தாலும் பெரும்பாலான முஸ்லிம்கள் இதை ஜீரணிக்க தயாராக மாட்டார்கள்.ஆகவே இவ்வாறான ஒரு நல்ல முயற்சியை இவர்களின் வருகையால் இல்லாமல் செய்வதை விட மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு சில புத்தி ஜீவிகளை கொண்டு இவ்வேலையை செய்வது மிகச்சிறந்தது.இவர்கள் இருவரின் வருகையால் முஸ்லிம் காங்கிரசும் மக்கள் காங்கிரசும் காலத்தி இழுத்தடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒருவரை சமுதாயம் நபுவது அவரின் கடந்த கால நிகழ்வுகளே இதையல்லாம் மனதில் கொண்டு செயல்பட சம்மந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும்.உண்மையில் இதில் சூரா கொமிட்டி சம்மந்தப்பட வேண்டும்.அரசியல் சார்பற்ற புத்தி ஜீவிகளின் உள்வாங்கல் மிக முக்கியம்.

    ReplyDelete
  5. They can talk too much like this. But they will not do anything. Because, they already had been in several position with political power. But they did not achieve anything. My opinion is our community must empover in the political.

    ReplyDelete
  6. அப்படி செய்தால் நல்லம்தான். ஆனால் அது நடக்குமா???

    ReplyDelete
  7. கட்டுரை சரி ஆனால் பஷீர் ஒரு முஸ்லிம் தேசியவாதி என்பது நகைச்சுவையாகவுள்ளதே....

    ReplyDelete
  8. Good initiative bt by old foxes have got to b rather sceptic of this another farce .
    Anyway good luck .

    ReplyDelete
  9. பதவிப்பேய்களும் அவர்களின் கைக்கூலிகளும் இதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பர்

    ReplyDelete
  10. எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒரு பொது கட்சியின் கீழ் ஒன்று பட வேண்டும்

    ReplyDelete
  11. Another farce is being staged to bully Muslims everything is nothing bt pipedream making our Umma s laughing stock.
    They r out to enjoy the limelight as they realized they r already in political wilderness.
    They would'nt rest in peace the power n perks so strong n tempting .

    ReplyDelete
  12. என்னதான் முஸ்லிம் அரசியல் வாதிகள் இதுவரை காலமும் முஸ்லிம் மக்களுக்காக வேண்டி என்ன செய்துள்ளீர்கள் .???உங்களுக்கு பதவி கிடைக்காவிட்டால் புதிய கட்சி ஆரம்பித்து முஸ்லிம் சமூகத்தை சீரளிக்கவா? தமிழ் தேசிய கூட்டணி எப்படி வெற்றிகரமாக செயல் படுகிறார்கள்.அது போக ஆளுக்கொரு கட்சி.மீண்டும் மீண்டும் மக்களை முட்டாளாக்க வேண்டாம்.

    ReplyDelete
  13. Fahmy Farook@ சொல்வது மிகச் சரியானதும், நடைமுறைச் சாத்தியமானதுமாகும்.
    இன்றைய அரசியல், சமுக நடைமுறையில், இப்போதைய சமுகத்தை 1986 ல் இருந்த சமுக அரசியல் மனோ நிலைக்கு மீளழைத்துச் செல்வதோ, அது போன்றொரு அரசியல் சிந்தனைப் புரட்சியை உருவாக்குவதோ நடைமுறைச் சாத்தியமற்றது. அன்றிருந்த அரசியல்வாதிகளும், புறச்சூழலும் சுயநலத்திற்கு அப்பால் நின்று சமுகத்தில் தாக்கம் செலுத்தின. ஆனால் இன்று சுயநல அரசியல்தான் எல்லா சமூகத்திலும், எல்லா தனிமனித அரசியல் முன்னெடுப்புக்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் ஷேக் இஸ்ஸதீனும் பஷீர் சேகுதாவூதும் விதி விலக்கல்ல.
    அரசியலில் மூழ்கிப்போனபின் சமுகத்திலிருந்து ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்டவர்களை மையப்படுத்தி அரசியல்சாரா ஒரு அமைப்பை எப்படி உருவாக்க முடியும்? அன்றியும் ஸ்திரமற்ற கொள்கையுடைய இவர்களா முஸ்லிம் சமுகத்தை ஒரிங்கிணைக்க போகிறார்கள்? சமுகம் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் நின்று வலு சேர்க்குமா?
    முதலில் நம்மை பிரித்து வைத்திருப்பது எது? அல்லது யார்? ... சுயநல அரசியல் நடாத்தும் பாழாய்ப்போன அரசியல்வாதிகள்தானே. எந்த ஒரு அரசியல்வாதியாவது சமகாலத்திலுள்ள சக அரசியல்வாதி சமுகத்திற்கு செய்த நன்மையினை வியந்து கூறாவிட்டாலும் பரவாயில்லை குறை கூறாமல் அரசியல் நடாத்தும் நிலை உண்டா? பிரிந்து கிடக்கும் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியின் கீழ் போட்டியிடப்போவதாக அறிவித்தால் மக்கள் என்ன வேண்டாம் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப் போகிறோம் என்றா கூறுவார்கள்?
    அரசியலில் முஸ்லிம் சமுகம் ஒரு கொடியின்கீழ் ஒருகட்சியின் கீழ் ஒன்றுபட வேண்டுமாயின் “முஸ்லிம் கவுன்சில்” அல்லது “அகில இலங்கை ஜம்யியதுல் உலமா” போன்ற (அரசியல்சாரா அமைப்பு என்பதற்கு உதாரணமாக கூறினேனே தவிர இவைதான் அரசியல்சாரா அமைப்பு என்று பொருள் கொண்டு விமர்சிக்க வேண்டாம்) அரசியல்சாரா அமைப்புகளுக்கு எமது அரசியல்வாதிகள் கட்டுப்பவார்களா? அல்லது இவற்றை மையமாகக்கொண்டு இயங்க உடன்படுவார்களா? ஆம் என்றால்... நல்ல விடிவுகாலம் பிறந்து விட்டதென்று பெருமை கொள்வோம்.
    இல்லையேல் பெரும்பான்மை கட்சியுடன் ஒன்றிணைந்து நாட்டையும் சமுகத்தையும் கட்டியெழுப்ப ஒத்துழைப்போம், என்றோ ஓரு நாள் நம் சமுகம் ஒன்று படும் என்ற நம்பிக்கையோடு. “விதைப்போம் முளைத்தால் மரம், இல்லையேல் உரம்”

    ReplyDelete
  14. இது ஒரு தண்ணி விட்டு எண்ணெய் எடுக்கும் ஒரு கட்டுரையாகவே பார்க்கிறோம். பின்கதவால் உள்நுழையும் யுக்தியே இங்கு கையாளப்பட்டுள்ளது. இது ஹக்கீமையும், ரிசாத்தையும் மலினப்படுத்துவதட்காகவே வரையப்பட்ட கட்டுரையாகவே நாம் பார்க்கிறோம். (சில நேரம் கட்டுரையாளர் இந்த எண்ணம் அற்றவராக இருக்கலாம் ஆனால் காட்டுரை இதைதான் கருத்துரைகிறது ).

    இது வரை தமிழர் தரப்போ, அரசாங்க தரப்போ எப்படியான தீர்வை முன்னெடுத்து செல்லப்போகிரார்கள் என்பதை அறிவிக்காமல் இருக்கும் போது இந்த கட்டுரையை வரைவதன் நோக்கம் தான் என்ன?

    முஸ்லிம் தேசிய வாதம் என்றால் என்ன என்று திரு. ஹசான் அலியோ, திரு. சேகு இஸ்சதீனோ கூறுவார்களா? அல்லது மேற் கூறப்பட்ட முஸ்லிம் சிந்தனையாளர்களான பசீர் சேகுதாவுத் ( இவரிடம் கேட்பதை விட பாலகுமாரிடம் கேட்பது மேல்), யு எல் எம் மொஹிடீன் ( இவர் நிறைய கதைப்பார் ஆனால் ஆதாரத்துடன் வரைபடங்களுடன் எதாவது கேட்டால் கட்செரியில் இருக்கும் என்று கூருவார் ) போன்றவர்களால் இது தான் இந்த நாட்டுக்கு சிறந்த தீர்வு என்று ஒரு தீர்வை முன்வைக்கத்தான் முடியுமா?

    யார் இந்த பெயர் முகவரியற்ற தமிழ் தரப்பு என்பதை கட்டுரையாளர் கூரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். குட்டையை குழப்பி மீன் பிடிக்க முனைவார்கள் மிகவும் கவனமாகவும் பக்குவமாகவும் இவர்களை கையாள வேண்டும்.

    ஹக்கீமும், ரிசாத்தும் உள்வாங்குப்பட்ட ஒரு பொதுகுழு ( இந்த விடயம் சம்பந்தமான புத்தி ஜீவிகள், நெஞ்சுரமுள்ள, பக்குவமுள்ள, விலை போகாத, தன்னடக்கம் உள்ள ) உருவாக்கப்பட்டு இந்த விடயத்தை கையாள வேண்டும் என்பது எமது பணிவான அபிப்பிராயமாகும்.

    ReplyDelete
  15. மக்களுக்கு சேகு தாவூத் மீதுள்ள கடுப்பு மேலே உள்ள comment களின் எண்ணிக்கையை பார்த்தாலே தெரியும்.

    ReplyDelete

Powered by Blogger.