Header Ads



'பாராளுமன்ற உறுப்பினரை வாடகைக்கு எடுப்பதிலும் பார்க்க, விலைக்கு வாங்குவது சிறந்தது'

-gtn-

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை  அமைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட முயற்சிகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் முயற்சியில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள சிறிசேன தனது கட்சியை சேர்ந்தவர்களிற்கு தேசிய அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பை வழங்கிய போதிலும் அவர்கள் எவரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இரு தசாப்தங்களிற்கு மேல் ஆட்சியில் இருக்காத ஐக்கிய தேசிய கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை, தங்களது வெற்றிக்கனியின் பெரும்பகுதியை தாங்களே சுவைப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தன சொந்த அரசாங்கத்தை அமைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வாடகைக்கு எடுப்பதிலும் பார்க்க விலைக்கு வாங்குவது சிறந்தது, என ஐக்கிய தேசிய கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாங்கள் 10 ற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களைளே வாங்கவேண்டிய நிலையில் உள்ளோம் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அதுவே மலிவானது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. I believe this is the best and practical option than giving the posts to the old gange again....also this is trustable for the hardly voted people against Mahinda & co

    ReplyDelete
  2. வாடகைக்கு எடுப்பதை விட விலையாக வாங்குவதே மேலான விடயம் சுதந்திர கட்சியுன் கூட்டுச்சேர்ந்து அரசாங்கம் நடத்த முடியாது.அவர்களை இம்மதியாக இருந்து சேவை செய்ய மஹிந்த என்ற பதவி ஆச பிடித்த முதலை விடாது.கிண்டி கிண்டி பிரச்சினையை உருவாக்கிக்கொண்டே இருப்பான்.அதேவேளை மைத்திரிக்கும் தேவை இன்னும் ஓரிரு வருடங்களில் தமது கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அடிப்படைக்கொள்கை.மைத்திரிக்கு மஹிந்தையை விட்டு விலகி ஆட்சி அமைக்க வேண்டும் அதேவேளை ஆட்சி அமைக்க ஆள்பலமும் போதாது மஹிந்தையை விட்டு அதிகமான சுதந்திரக்கட்சிக்காரர்களை பிரித்தடுக்கவும் முடியவில்லை.இந்த நிலையில் இரண்டும் கேட்டான் நிலையில் இருக்கிறார் மைத்திரி.கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கூட்டரசாங்கம் அமைத்தாலும் நிச்சயமாக ஓரிரு வருடங்களில் பார்லிமென்ட் கலைக்கப்படும்.மைத்திரியும் அதை தாராளமாக விரும்புவார் காரணம் இன்னும் இரண்டு வருடங்களில் சுதந்திகட்சி தன்னைபலப்படித்தில்கொள்ளும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியை பலவீனமடயச்சைவதக்கும் மிகச்சுலபமாக இருக்கும்.இவர்களால் அரசாங்கம் நடத்த முடியாது என்ற தொனியில் சுதந்திரக்கட்சி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.அந்த நேரத்தில் நம் மஹிந்த மாத்தையா சொல்வார் நான் ஓயவடுக்க முடியாத அளவுக்கு மக்கள் என்னை விடவில்லை ஆகவே நான் மீண்டும் அரசியலுக்கு வண்ருகிறேன் என்று சொல்லி எப்படியாவது பிரதமர் பதவியை கைப்பற்றுவார் இதுதான் கடக்கும் அதனால் இப்போதே ரணில் விழிப்புடன் இருக்க வேண்டும் முழுசாக மைத்திரியை அவர் நம்பினாலும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஆட்சி பறிபோவதை யாராலும் தடுக்க முடியாத ஒரு அவல நிலை ஏற்ப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.