Header Ads



வசீம் தாஜுடீன் படுகொலை - கொழும்பு நீதிபதியின் அதிரடி உத்தரவும்

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் றகர் வீரர் வசீம் தாஜுடீன் மோட்டார் வாகனத்தின் ஸ்டீரிங் மற்றும் சாவி மாத்திரம் முழுமையாக தீப்பற்றி எறிவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால் பரிசோதகர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதவானிடம் இரகசிய காவல்த்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகமையவே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியதா? விபத்துக்குள்ளாகியிருந்தால் தீப்பற்ற வாய்ப்புகள் உள்ளதா? அவ்வாறு தீப்பற்றியிருந்தால் ஸ்டீரிங் மற்றும் சாவி முழுமையாக எறிந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? என்பது தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரிசோதகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியிருந்தால் சாரதிக்கு எவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்? ஸ்டீரிங் உடைந்து பிரிந்து செல்ல முடியுமா? உடைந்து பிரிந்து செல்ல முடியாவிட்டால் எவ்வாறு பிரிந்தன? ஆகிய விடயங்கள் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்குமாறு உதவி ஆணையாளரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.