Header Ads



நீர்கொழும்பில் நடந்த மோசடி

நீர்கொழும்பு களப்பை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் நிதி, முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. 

இந்த முறைக்கேடு தொடர்பில் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் சரத்குமார திஸாநாயக்க மற்றும் மீன்பிடிதுறைமுக சட்ட அமைப்பின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட வரவு செலுத்திட்டத்தின் போது இந்த ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இந்த நிதியில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ம் திகதி நீர்கொழும்பு நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு 89 லட்சம் ரூபாவும், அந்த கூட்டத்துக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் ரீ-ஷேர்ட் தயாரிப்புக்காக 43 லட்சம் ரூபாவும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. பின்னூட்டம் எழுதுவதிலும் கட்டுப்பாடு வந்துள்ளதால் அடக்கி எழுத வேண்டிய கட்டாயத்துக்கு வாசகர்கள் தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு விசாரித்து விசாரித்து அனுப்பிக்கொண்டு இருக்கும்போது ஐந்து வருடம் முடிந்து விடும்.சட்டமா அதிபர்தான் எத்தனை பேரின் வலக்கைதான் பார்ப்பது.அதிகமான தஞ்சன் உண்டானால் வெளிநாடு ஒன்றுக்குசுட்டுப்பிரயானத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்ப்படும் சட்தமா அதிபருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.