Header Ads



எதிர்க்கட்சித் தலைவரை தீர்மானிப்பது சபாநாயகரா..? ஜனாதிபதியா..? எதிர்க்கட்சியா..?

நாடாளுமன்ற செயற்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளைய தினம் ஜனநாயக ரீதியான தீர்மானத்தை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன, ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் தொடர்பிலும், இந்த நாட்டில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்காத தீர்மானம் ஒன்றை ஜனாதிபதி மேற்கொள்வார் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்போது, செய்தியாளர் ஒருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்படுமா என வினவிய போது, அதுபற்றி தமக்கு கூற முடியாது என தெரிவித்த அவர், ஜனாதிபதி ஜனநாயக ரீதியான் முடிவை எடுப்பார் என குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகளும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளும் இன்று சந்திப்பொன்றை நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன் போது இரண்டு தரப்பினரும் விரோத மனப்பான்மையின்றி, தேசிய அரசாங்கம் ஒன்றில் இணைந்து செயல்படுவது குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொண்டதாக சரத் அமுனுகம் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை சத்தியபிரமாணத்தின் பின்னர் இரண்டு தரப்பினரும் இணைந்து ஊடக அறிவிப்பு ஒன்றை விடுப்பது என்றும் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

2

புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்துரைத்துள்ள அவர்,

நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி சபாநாயகரே எதிர்க்கட்சி தலைவரை தீர்மானிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளே எதிர்க்கட்சியை தலைவரை தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் யாரையும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கோரமுடியும். எனினும் சபாநாயகரே இறுதிமுடிவை எடுப்பார் என்று கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நான் அடித்து சொல்வேன் இம்முறை எதிகட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டணியே அதிலும் இரா .சம்மந்தன் அவர்கள் .

    ReplyDelete

Powered by Blogger.