Header Ads



கெஹலிய, விமல், டிலான், சஷீந்திரவின் பைல்களுடன் சென்ற ரஞ்சன் - தப்பியோடிய பூதம்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்க இன்று (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் சென்றிருந்தார்.

ஆவணங்கள் சிலவற்றை எடுத்துச்சென்ற ரஞ்சன் ராமநாயக்க, ஆணைக்குழுவின் தலைவரை சந்திக்க முயற்சி செய்தார்.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாவது;

இது ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்டை தொடர்பிலான முறைப்பாடாகும். அத்துடன், கெஹலிய ரம்புக்வெல்ல, விமல் வீரவங்ச, டிலான் பெரேரா, மற்றும் சஷீந்திர ராஜபக்ஸ போன்றோரின் பைல்களும் (கோப்புகள்) இங்கு உள்ளன. இது போன்ற பல பைல்கள் உள்ளன. இங்குள்ள ஒரு பூதம் இந்த பைல்களை மறைக்கின்றது. பாலபட்டபெந்தியை சந்திக்க வந்தேன். அவர் என்னை சந்திக்காமல் விலகிச் சென்றார். செயலாளருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ரஞ்சன் ராமநாயக்க இந்த இடத்திற்கு வந்துள்ளாரா என்று தொலைபேசியில் கேட்டார். இதுபோன்ற தலைவர்களை தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதியே நியமித்தார். பாலபட்டபெந்தியிடம் நான் ஒருவிடயத்தை கேட்கின்றேன். முறைப்பாட்டின் பின்னர் யாரை நீங்கள் சிறையில் அடைத்தீர்கள்? ஆகவே மிக விரைவில் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவை கலைத்துவிடுமாறு கௌரவ ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.