Header Ads



இதயத்தை உருக்கும் புகைப்படம் - 3 மணித்தியாலங்களில் குவிந்த பணத் தொகை

சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் தனது தோள்களில் மகளைத் தூங்க வைத்தவாறு பேனாக்களை விற்பனை செய்வதைப் படம்பிடித்து ட்விட்டரில் Gissur Simonarson என்பவர் பதிவிட்டிருந்தார்.

லெபனான் – பேய்ரூட்டில் அந்நபர் பேனா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதயத்தை உருக்கும் இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த பலரும் அந்தத் தந்தைக்கு உதவ முன்வந்தனர்.

இதன் பயனாக, ட்விட்டரில் புகைப்படம் பதிவிடப்பட்ட மூன்றே மணித்தியாலங்களில் அவருக்கு £11,000 உதவித்தொகை குவிந்துள்ளது.

அதனை அவரிடம் ஒப்படைக்குமாறு ட்விட்டரில் பலரும் Gissur Simonarson இடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், சிரியாவைச் சேர்ந்த அகதித் தந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டார் Gissur Simonarson.

அதிர்ஷ்டவசமாக, ட்விட்டரில் இந்த புகைப்படத்தையும், அதில் உள்ளவரை Gissur Simonarson தேடுவதையும் அவதானித்த நபர் ஒருவர், Gissur Simonarson ஐத் தொடர்பு கொண்டு சிரிய அகதி குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

அந்நபர் தனது வீட்டை அண்டிய பகுதியில் இருப்பதாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

24 மணிநேரத் தேடுதலில் அந்த தந்தை கண்டுபிடிக்கப்பட்டார். அப்துல்லா எனப்படும் இந்நபர் தனது மனைவி இல்லாமல் தனியாக இரண்டு பிள்ளைகளை வளர்த்து வருபவர் என்பது தெரிய வந்தது.

டமஸ்கஸிலுள்ள ஒரு அகதி முகாமில் இவர் வசித்து வருகிறார்.

#BuyPens எனும் ஹேஸ்டேக்கில் இவருக்கு தற்போதும் உதவித் தொகை வழங்க ட்விட்டரில் பலரும் முன்வந்தவண்ணமுள்ளனர்.



3 comments:

  1. வல்ல நயன் உங்களின் சன்மானத்தை ஹலாலாக பொருந்திக்கொள்வானாக

    ReplyDelete
  2. In Sha ALLAH, All mighty Allah will guide him

    ReplyDelete

Powered by Blogger.