Header Ads



மிக வலுவான நிலையில் 176 எம்.பி.க்களின், ஆதரவுடன் தேசிய அரசாங்கம்..?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் எதிர்கட்சியில் 14 சுதந்திர கட்சிகள் உறுப்பினர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட 14 பேர் மற்றும் முன்னணியில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் 11 பேரும் நாடாளுமன்றில் பிரதான எதிர்கட்சியாக நியமிக்கப்படவுள்ளனர். அதன் மூலம் அவர்களிடம் 25 ஆசனங்கள் உள்ளன.

இதற்கு மேலதிகமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணியில் 6 ஆசனங்களும் உள்ளன.

தேசிய அரசாங்கத்திற்காக இதுவரை கிடைத்துள்ள ஆசனங்களின் எண்ணிக்கை 176 ஆகும். அது இந் நாட்டு வரலாற்றில் மிகவும் வலுவான ஆளும் கட்சியாகும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Cheating...............................Cheating....................Cheating ..................................

    ReplyDelete

Powered by Blogger.