Header Ads



176 பேர் பலம்கொண்ட அரசாங்கம் அமைவது, முஸ்லிம்களுக்கு ஆபத்து - SLMC

(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

முஸ்லிம் தவைர்கள், தமது சமூகத்தின் உரிமைகள் குறித்து குரல் கொடுப்பதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி, இச்சந்தர்ப்பத்தை தவறவிடுமிடத்து இதுபோன்ற அரிய வாய்ப்பை முஸ்லிம் சமூகம் இனிமேல் பெற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்தார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஹசன் அலி,

மைத்திரி, ரணில் என்ற இரு தவைர்களுக்கும் ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்கு முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அந்த இருவரும் ஆட்சிபீடங்களில் அமர்ந்திருப்பதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், தற்போது நடைபெற்றுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் நிரூபிக்கபட்டுள்ளது. இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகம் தனது உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு வாய்ப்பு பிறந்துள்ளது.  எமது சமூகத்தின் ஆதரவுடன் ஆட்சிக் வந்தவர்கள் எமது சமூகத்தின் உரிமைகளை வழங்க முன்வரவேண்டும்.

முஸ்லிம்கள் விரும்பிய இருவர் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதால் முஸ்லிம்களுக்கு உரிமைகள் எல்லாம் வழங்கப்பட்டுவிட்டது அல்லது முஸ்லிம்களின் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மாயை நமது சமூகத்தை பீடித்துள்ள வெட்கக்கேடான சாபக்கேடாகும்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பிரச்சினையை கிளப்பினால் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் கோபித்துக் கொள்வார்கள், அல்லது பௌத்த தலைமைப் பீடங்கள் ஆத்திரமடையும் என்ற சாக்குப்போக்குகளை சொல்லி எமது சமூகத்தை முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.

வீதி போட்டுள்ளோம், அரசாங்கத் துறையில் நியமனம் வழங்கியுள்ளோம், அபிவிருத்தி செய்துள்ளோம் என்பதெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சிகைளுக்கு இதுவரை எத்தகைய தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்பதுதான் இங்கு பிரதானமானது. இதுவரை முஸ்லிம் அரசாங்க அதிபரைக்கூட எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை புற்றுநோய் போல் நீடித்துச் செல்கிறது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிலவுகின்றன.

வடக்குகிழக்கில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் நிலையில் அவர்கள் அந்தப் பிரதேசங்களை உள்ளிடக்கிய தனி நிர்வாக அலகு அல்லது தனிக்கரையோர மாவட்டங்களை கேட்பது நியாயமானது. ஆனால் முஸ்லிம்களினால் தற்போது ஆட்சிக்கு வந்தவர்களாக வர்ணிக்கப்டும் மைத்திரியிடமும், ரணிலிடமும் இவற்றை கொண்டு சென்றது யார்...? கொண்டு செல்லப்போவது யார்...?

தற்போது ஆட்சிபீடத்தை அலங்கரிக்கும் மைத்திரியும், ரணிலும் இனநெருக்கடிக்கு தீர்வுகாண முயற்சிக்கிறார்கள். இதற்கு சாவதேச சமூகமும் ஆதரவு தெரிவிக்கும். ஒரு சமூகத்தின் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கண்டுவிட்டால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியுமா..? அப்படியாயின் முஸ்லிம்களின் நிலை என்ன..? இதுபற்றியெல்லாம் எமது முஸ்லிம் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் இதுபற்றி உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

சிங்களத் தலைவர்களும் முஸ்லிம் பிரதேசங்களில் சில அபிவிருத்திகளை செய்துவிட்டு, முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை புறக்கணிக்க முயற்சிக்கலாம். இதுகுறித்து நமது முஸ்லிம் சமூகம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகிறது.

தற்போது 176 பேரின் ஆதரவுடன் அமையவுள்ள அரசாங்கமானது முஸ்லிம்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் என்று எவரும் தப்பாக எடைபோட்டுவிடக்கூடாது. 2 பிரதான கட்சிகள் ஒன்றுசேரும் போது அங்கு சிறுபான்மை சமூகங்களை அடக்கியாளும் நிலையும் தோன்றலாம்.

மேலும் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பவர்களில் இனவாதத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து, அந்த இனவாதத்தின் மூலம் தேர்தலில் வெற்றியடைந்தவர்களாவர் என்பதையும் நாம் நினைவிற்கொள்வதுடன், இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்களும், அவற்றின் பிரதிநிதிகளும் இவ்வேளையில் ஒன்றுபடுவதுதான் காலத்தின் அவசியமாகி நம்முன்னே நிற்கிறது எனவும் இதன்போது ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் ஹசன் அலி தெரிவித்தார்.

4 comments:

  1. உரிமை உரிமை என்று கூறிக்கொண்டு வீணாக காலத்தை கடத்திக்கொண்டிராமல் கையில் கிடைத்திருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி எமது முஸ்லிம் சமூகத்தின் கல்வி ,பொருளாதார ,சுகாதார ,வீதிப்புனரமைப்பு போன்ற விடயங்களில் துரிதமாக செயற்பட்டு அபிவிருத்தி செய்யுங்கள் .

    ReplyDelete
  2. Please give the national list every thing become sad down

    ReplyDelete
  3. தேசிய அரசாங்கம் என்றால் 176 அல்ல 225 பேரும் சேர்ந்துதான் அரசாங்கம் அமைப்பார்கள். இது முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகத்திற்கு தெரியாதா? அப்போ நீங்கள் தேர்தல் காலத்தில் மேடைகளில் முழங்கிய தேசிய அரசாங்கம் என்பது UNP உங்களை மட்டும் அழைத்து ஆட்சி அமைப்பதும், வழக்கம் போல நீங்கள் முஸ்லிம் சமூகத்தை விற்று பணமும் அமைசுப்பதவிகளும் பெறுவதுதானா? இம்முறை நடக்கவே நடக்காது. விரும்பினால் அரசுடன் இணைந்திருக்கலாம் இல்லாவிட்டால் எந்நேரமும் வெளியேறலாம்.

    ReplyDelete

Powered by Blogger.