Header Ads



தூக்கில் போடும் வேலையை செய்வதற்கு 13 பேரிடமிருந்து விண்ணப்பம்

அலுகோசு பணியாட்கள் தேவையென்று வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தையடுத்து, தமக்கு 13 விண்ணப்பங்கள் கிடைக்கபெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பணிக்கே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததாகவும் இந்த விளம்பரம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், நீதி அமைச்சிடம் அனுமதி பெறப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அருண அத்தபத்து தெரிவித்தார்.

தற்போது வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரிகள் நவம்பர் மாதத்துக்குள் தெரிவு செய்யப்படுவர் என்றும் தெரிவு செய்யப்பட்டோருக்கு இரண்டு கிழமைகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கெனவே குறித்த அலுகோசு பணிக்காக சேர்க்கப்பட்டவர்கள், பயிற்சி காலத்தின் போதே பணியில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. கட்டாயம் ஆள் தேவை கடந்த அரசாங்கத்தில் கொலைகாரர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டியுள்ளது (பயிற்ச்சி கொடுப்பது எப்படியப்பா அதஊக்கும் ஆள்களை தூக்கிபோட்டுப்போட்டு தான் பயிட்சியா ?

    ReplyDelete
  2. கட்டாயம் ஆள் தேவை கடந்த அரசாங்கத்தில் கொலைகாரர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டியுள்ளது (பயிற்ச்சி கொடுப்பது எப்படியப்பா அதஊக்கும் ஆள்களை தூக்கிபோட்டுப்போட்டு தான் பயிட்சியா ?

    ReplyDelete

Powered by Blogger.