Header Ads



"மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்" மஹிந்த ராஜபக்ச

கடந்த 60 மாத காலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் செயற்படுத்திய 58 ஆயிரம் அபிவிருத்தி திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இடை நிறுத்தியமையினால் 15 லட்ச வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி பெற்றும் கொள்ளும் வெற்றியின் பின்னர் ஒரு வாரத்தினுள் அனைத்து அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து நாட்டிற்கு ஏற்பட்ட பிழைகளை திருத்துவதற்கு தான் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை அரசாங்கத்தில் சுகாதார கொள்கையின் ஊடாக தவறாக வழிநடத்தி மக்களை ஏமாற்ற முயற்சித்த ஐக்கிய தேசிய கட்சி பனடோல் ஒன்றின் விலையேனும் குறைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியின விலையை குறைத்து விட்டு தற்போது அதன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையினை தெளிவாக காண முடிகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.