Header Ads



மஹிந்த­விற்கு எதி­ராக கூட்­ட­ணி­யொன்றை நிறு­வ, சந்­தி­ரிக்கா பேச்­சு­வார்த்தையை ஆரம்பித்தார்

மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக போட்­டி­யி­டு­வ­தற்கு கூட்­ட­ணி­யொன்றை நிறு­வுவதற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க அன்னச் சின்­னத்தில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்­ட­போது ஆத­ர­வ­ளித்த கூட்­ட­ணியின் பிர­தான கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கான பணி­களை ஆரம்­பித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரியவருகின்றது.

மஹிந்த ராஜ­பக்ஷ ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியில் போட்­டி­யிட அனுமதிக் கப்பட்டால் மைத்­திரி அணியை சேர்ந்த 46 பேர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனோ அல்­லது சந்­தி­ரிகா கூட்­ட­ணியில் இணை­வ­தற்குத் தயா­ரா­கு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கள­மி­றங்­கினால் நானும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தயார் என்று நேற்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­நா­யக்க குமா­ர­துங்க குறிப்­பிட்­டி­ருந்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் மஹிந்த ராஜபக்ஷ தேர்­தலில் போட்­டி­யிட போவ­தாக நேற்று அறி­வித்­துள்ளார். இதன்­பி­ர­காரம் ஆளும் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி தேர்­த­லுக்கு தயா­ராகும் பணி­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

எனினும் மஹிந்த ராஜபக்ஷ கள­மி­றங்க தீர்­மா­னித்­துள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக கூட்­ட­ணி­யொன்றை ஆரம்­பிக்கும் முக­மாக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் எதி­ரணியின் அன்னச் சின்ன கூட்­ட­ணியின் பிர­தான கட்­சி­க­ளுடன் முக்­கிய கட்ட பேச்­சு­வார்த்­தை­களை சந்திரிகா குமாரதுங்க ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறு­மய உள்­ளிட்ட பிர­தான கட்­சி­க­ளுடன் ஆரம்­பக்­கட்ட பேச்­சு­வார்த்­தை­களை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­நா­யக்க குமா­ர­துங்க ஆரம்­பித்­துள்ளார்.

இத­னூ­டாக கூட்­டணிக் கட்­சி­யாக பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றார்.அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டால் மைத்திரி அணியை சேர்ந்த 46 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சந்திரிகா கூட்டணியில் இணைவதற்கு தயாராகுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.