Header Ads



எமது கட்சி அதிகப்படியான ஆசனங்களை பெற்று, ஆட்சியின் முக்கிய பங்காளியாக மாறும் - றிசாத்

இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவைாயன அடித்தளத்தினை இட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணயின் முதன்மை வேட்பாளரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வரவுள்ளார் என்றும் கூறினார்.

வவுனியா மதவாச்சி வீதியில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் யாணைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது.இந் மாவட்டத்தில் 3 ஆசனங்களை நாம் பெற்றுக்கொள்வோம்.வன்னி மாவட்டத்தில் அரசியலில் பெரும் மாற்றங்களை மக்கள் செய்து காட்டவுள்ளனர்.கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் எதனை இந்த மக்களுக்கு சாதித்துக் காட்டியுள்ளார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

யுத்த அழிவுகளால் அத்தனையினையும் இழந்த மக்களுக்கு தேவையானது அவர்களது வாழ்வாதரமாகும்,அதற்கு மாற்றமாக தேர்தல் காலங்களில் தேசியத்தை பேசி அவர்களத உணர்வுகளை உசுப்பிவிடுவதாக நினைத்துக் கொண்டு அவர்களது உணர்வுகளின் நரம்புகளை தரித்து சென்ற நிலையினையே காணமுடிந்தது.

இந்த நிலையில் இருந்து மக்கள் தற்போது விடுபட ஆரம்பித்துவிட்டனர்,இன்று எம்முடன் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்துவருகின்றதை பார்க்கின்ற போது சந்தோஷம் அடைகின்றோம்.மக்களுக்கு கிடைக்காத அபிவிருத்தியில் எவ்வித பலனுமில்லை என்பதை எல்லோரும் இன்று அறிந்து கொண்டனர்.

வடக்கிலும் ,கிழக்கிலும் எமது கட்சி அதிகப்படியான ஆசனங்களை பெற்று ஆட்சியின் முக்கிய பங்காளியாக மாறும் என்பதில் எந்த சந்கேதமில்லை.அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது.இந்த மாவட்டத்திற்கு மயில் சின்னம் புதிதாக இருந்தாலும்,மக்கள் ஆதரவு அதற்கு பெருகிவருகின்றது.இதனை கண்டு பலர் அச்சமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்த ஊடக மாநாட்டில் வேட்பாளர்கான வீ.ஜயதிலக,கருணாதாச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

4 comments:

  1. Mahinda pola vair olra arambichitaru allah arivan yar win or loss

    ReplyDelete
  2. ரிசாத் அவர்களே, முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி (முஸ்லிம்களின் அரசியல் சக்தி, ஒற்றுமை ஒரு தலைமைத்துவத்தின் கீழ் வரவேண்டும் என்பதற்காக ) மிகவும் நீண்ட கால போராட்டத்தின் தியாகத்தின் மத்தியில் அன்று மறைந்த தலைவர் அஸ்ரபின் தலைமையில் இளைஞர்களினாலும் , பல்கலைகழக மாணவர்களினாலும், சமூக ஆர்வர்களினாலும், உருவாக்கப்பட்டது. தலைவர் அஷ்ரப் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இன்னும் கட்சி போராளிகள் இருக்கிறார்கள். இதன் அவசியம் அறிந்த இளைஞர்களும், பல்கலைகழக மாணவர்களும், புத்தி ஜீவிகளும் இருக்கிறார்கள். இவர்கள் நிட்சியமாக இந்த கட்சியின் தேவையை மக்கள் முன் கொண்டு செல்வார்கள், கொண்டு செல்லப்பட வேண்டும் என கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

    ரிசாத் பதுர்தீன் என்ற தனி நபர் பின்னால் முஸ்லிம் சமூகமோ அல்லது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களோ தங்களது அரசியல் அடையாளத்தை அடகு வைக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். மரணம் என்பது எவருக்கும் வரலாம், அப்படி ஓன்று ரிசாதுக்கும் ( இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும் அரசியலில் தோல்வியையும் கொடுக்க பிரார்த்திக்கிறோம்) ஏற்பட்டால், இந்த ரிசாத்தின் மக்கள் கட்சிக்கு என்ன நடக்கும் என்பதை சற்று சிந்துக்குமாறு இவருக்கு ஆதரவாக உள்ளவர்களிடம் ( சுயநலம், வஞ்சகம், வக்கிரம், பொறாமை, ஏமாற்றம் அடைந்தவர்கள் ) கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

    ReplyDelete
  3. ரிசாத் அவர்களே, முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி (முஸ்லிம்களின் அரசியல் சக்தி, ஒற்றுமை ஒரு தலைமைத்துவத்தின் கீழ் வரவேண்டும் என்பதற்காக ) மிகவும் நீண்ட கால போராட்டத்தின் தியாகத்தின் மத்தியில் அன்று மறைந்த தலைவர் அஸ்ரபின் தலைமையில் இளைஞர்களினாலும் , பல்கலைகழக மாணவர்களினாலும், சமூக ஆர்வர்களினாலும், உருவாக்கப்பட்டது. தலைவர் அஷ்ரப் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இன்னும் கட்சி போராளிகள் இருக்கிறார்கள். இதன் அவசியம் அறிந்த இளைஞர்களும், பல்கலைகழக மாணவர்களும், புத்தி ஜீவிகளும் இருக்கிறார்கள். இவர்கள் நிட்சியமாக இந்த கட்சியின் தேவையை மக்கள் முன் கொண்டு செல்வார்கள், கொண்டு செல்லப்பட வேண்டும் என கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

    ரிசாத் பதுர்தீன் என்ற தனி நபர் பின்னால் முஸ்லிம் சமூகமோ அல்லது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களோ தங்களது அரசியல் அடையாளத்தை அடகு வைக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். மரணம் என்பது எவருக்கும் வரலாம், அப்படி ஓன்று ரிசாதுக்கும் ( இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும் அரசியலில் தோல்வியையும் கொடுக்க பிரார்த்திக்கிறோம்) ஏற்பட்டால், இந்த ரிசாத்தின் மக்கள் கட்சிக்கு என்ன நடக்கும் என்பதை சற்று சிந்துக்குமாறு இவருக்கு ஆதரவாக உள்ளவர்களிடம் ( சுயநலம், வஞ்சகம், வக்கிரம், பொறாமை, ஏமாற்றம் அடைந்தவர்கள் ) கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

    ReplyDelete
  4. kuruveeeeeeeeeeeeeeeeee............p... u......mmm////////mjutnf

    ReplyDelete

Powered by Blogger.