Header Ads



மைத்திரியை தாக்குவதை உடனடியாக நிறுத்தவும், நான் அவரை கையாளுகின்றேன் - மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கருத்து வெளியிடுவதனை நிறுத்திக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்களை ஆரம்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கூட்டணியின் பொதுச் செயலாளர் அவசியமான அனைத்தும் செய்துக்கொடுப்பதனால், தான் வேட்பு மனு பெற்றுக்கொண்டதனை போன்றே தனது குழுவுக்கு வேட்பு மனு பெற்று தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரியை தாக்குவதனை உடனடியாக நிறுத்தவும். நான் அவரை கையாளுகின்றேன். இதுவரையில் நடந்த அனைத்திற்குமான கௌரவம் எங்கள் சுசிலுக்கே போய் சேர வேண்டும்.

அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மெதமுல்லைக்கு வருகை தராமல் மைத்திரியுடன் விகாரைக்கு சென்று ஊடகங்களில் புகைப்படங்களையும் போட்டுக்கொண்டு சரியான முறையில் மைத்திரியையும் சமாளித்துக்கொண்டார்.

மீகுதியானவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன். மைத்திரி என்பவர் எங்கள் பிரதான எதிரி அல்ல. எங்கள் பிரதான எதிரி ஐக்கிய தேசிய கட்சி.

ஐக்கிய தேசிய கட்சியை தற்போது தாக்குவதற்கு ஆயத்தமாகுங்கள். கோப் குழு அறிக்கை, பிணைப்பத்திர மோசடி, புலம்பெயர்ந்தோர் கலந்துரையாடல்கள் போன்றவற்றை வெளியில் எடுத்து ஐக்கிய தேசிய கட்சியை அழித்து விடுங்கள்.

மைத்திரியை பயமுறுத்தி நான் வேட்பு மனு பெற்றுக்கொண்டதனை போன்று எங்கள் குழுவுக்கும் வேட்பு மனு பெற்றுக்கொடுப்பேன்.

ஐக்கிய தேசிய கட்சி இணையத்தளங்களில் தற்போதே மைத்திரியை தாக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களில் இருந்து நாங்கள் மைத்திரியை பாதுகாக்க வேண்டும்.

அரசியல் என்பது ஒட்டகம் போன்றது (முதலில் கூடாரத்தினுள் தலையை போட்டுக்கொண்டு பின்னர் உடம்பை நுழைத்துக் கொள்ளுதல்) நான் ஆர்.பிரேதாஸவிடம் இதனை கற்றுக்கொண்டேன்.

மிகுதியான வேலைகளை நான் பார்த்துக் கொள்கின்றேன், தற்போது குழுவினரும் நான் கூறுவதனை போன்று செயற்படுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது குழுவுக்கு அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

2 comments:

  1. My3 evarai..........................

    ReplyDelete
  2. வாக்குகள் எனும் கூர்மையான வெட்டுக்கத்தியை நாம் ஒழுங்கான முறையில் பயன்படுத்தினால் கூடாரத்திற்குள் நுழையும் ஒட்டகத்தின் கறியோடு இரவு விருந்து படைக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.