Header Ads



'குற்றவாளிகளுக்கு வேட்புமனு வழங்கமாட்டோமென மைத்திரியும், ரணிலும் உறுதியளிக்க வேண்டும்'

நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்கினால் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என்று கபே அமைப்பு தெரிவித்துள்ளது. 

கபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 

இந்த நாட்டின் பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே காணப்படுகின்றன. இந்த கட்சிகளின் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளனர். 

கடந்த 9 மாத காலமாக ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் குறிப்பிட்டு வந்தனர். 

ஆகவே ஜனாதிபதியும் பிரதமரும் ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டது என உறுதியளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும் என கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.