Header Ads



"முஸ்லிம் காங்கிரஸ் எனும், அரனுக்குள் பதுங்கி அரசியல் வியாபாரம்"

(சப்றின்)

பசீர் சேகுதாவூத் தனது தேர்தல் வியூகத்தை ஏற்றுக் கொண்டால் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுவதாக  ஒரு செய்தியினை பார்த்தேன். உங்கள் வியூகம் மிகப் பெரும் யுத்த தந்திரமா? ஒரு வாசகனாக இருந்து எனது விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரனுக்குள் பதுங்கி அரசியல் வியாபாரம் செய்த ஒரு நபராகத்தான் உங்களை முஸ்லிம் அரசியலில் நான் பார்க்கின்றேன். என்னுடய விமர்சனத்தை முன்வைப்பதற்கு முன் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விளைகின்றேன். எப்போதாவது நீங்கள் 5000 வாக்குகளுக்கு மேல் பெற்று எம்.பி. யான சரித்திரம் இருக்கின்றதா?

1989ம் ஆண்டு நீங்கள் ஈரோஸ் இயக்கத்தில் இருக்கும் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேற்சை குழு 1ல் மாவட்டபட்டியல் ஊடாக ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டு தேர்தலில் இறுதி இடத்தை அடைந்தார் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்க வேண்டும் என்று கோரி பாராளுமன்ற புறக்கணிப்பில் ஈரோஸ் இயக்க சார்பான உறுப்பினர்கள் பதவியிளந்தனர் இன்னிலையில் பட்டியலில் காணப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் பதவிஏற்காத போது இயக்கத்தின் தார்மீக கடமைகளை மறந்து தமிழ் வாக்காளர்களுக்கு துரோகம் செய்து பாராளுமன்றம் போன வியூகத்தை பற்றிப் பேசப்போகின்றீர்களா?

தமிழ் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் 1990ம் ஆண்டு பிரமேதாசாவின் அரசாங்கத்தோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்து குற்றப்பிரேனைக்கு ஆதரவளிப்பதற்கு விளைந்த வியூகத்தை பற்றிப் பேசப்போகின்றீர்களா?

தமிழர்களின் வாக்குகளுக்கு கிடைத்த பாராளுமன்ற பதவியின் காலம் முடிந்து, 1998ம் ஆண்டு அரசியலில் தஞ்சம்புகிர்வதற்கு இடம்தேடி அஸ்ரப்பின் சிறிலங்கா முஸ்லிம்காங்கிரசில் நுளைந்த நீங்கள் அஸ்ரப் முன்வைத்த தென்கிழக்கு அலகு தொடர்பாக முஸ்லிம் காங்கிரசில் இருந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நடவடிக்கையில் ஈடுபட்ட வியூகத்தை பற்றி பேசப்போகின்றீர்களா?

2001ம் ஆண்டு  தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சி புலிகளோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் ஓரு குழு என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும், வாழைச்சேனையில் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டு எரியூட்டி புதைக்கப்பட்ட போதும் மரணித்த மையத்தினை கூட எடுக்க விடாமல் புலிகள் தடுத்த போது முஸ்லிம் காங்கிரசின் மதியுரைஞ்சன் அன்ரன் பாலசிங்கம் என்று தன்னை இனங்காட்டி புரிந்துணர்வு உடன்படிக்கையே நியாயப்படுத்திய வியூகத்தை பற்றிப்பேசப்போகின்றீர்களா?

2001ம் ஆண்டு   ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காக மஹாராஜா நிறுவனத்துடன் பேரம் பேசி முஸ்லிம் காங்கிரசையும், முஸ்லிம் சமுகத்தையும் சபாரி வாகனங்களுக்கும், காசுக்கும் அடகுவைத்த பேரத்திற்கான வியூகத்தை பற்றிப் பேசப்போகின்றீர்களா?

2005ம் ஆண்டின் அரசியல் நிலைமையும் புலிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டு தத்தளித்தபோது முஸ்லிம் காங்கிரசின் தலைவரை சுயாதினமாக இயங்க விடாமல் தடுத்து, ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து ஜனாதிபதி தேர்தலில்  தோல்வியடைந்த வியூகத்தை பற்றிப்பேசப் போகின்றீர்களா?

முஸ்லிம் காங்கிரசின் தலைவரை தட்டுக்குத்தில் போட்டு விடயங்களை சாதிக்க வேண்டும் என்பதற்காக குமாரி எனும் அறியாமையினே சீடீயில் அடித்து மூக்கணம் கயிறிணை இடிப்பில் செருகி அலைந்து திரிந்த வியூகத்தை பற்றி பேசப்போகின்றீர்களா?

2012ம் ஆண்டு கிழக்குமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் மஹிந்த அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்ட போது முஸ்லிம் காங்கிரசில் தனித்து போட்டியிடவேண்டும் என்ற நிலைமையில் மக்கள் இருந்தனர் தாங்கள் மஹிந்தையோடு நின்று முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் வியூத்தை தோற்கடிக்க முனைந்த வியூகத்தை பற்றிப்பேசப்போகின்றீர்களா?

மஹிந்த அரசாங்கத்தால் பொதுப்பல சேனா எனும் சிங்கள கடும்போக்கு தீவிர வாத இயக்கம் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களின் உயிர், உடமைகள், பொருட்கள் அழிக்கப்பட்டபோது முழு முஸ்லிம் சமுகமே மஹிந்தயினை தோற்கடிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்த போது 2015 ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை விட்டு வெளியேறி வந்த போது மனச்சாட்சிக்காக மஹிந்தையே ஆதரிக்கின்றேன் என்று கூறிய வியூகத்தை பற்றி பேசப் போகின்றீர்களா?

இன்னும் பல நுணுக்கமான தங்களின் சமுகத்திற்கான துரோக விடயங்கள் பேச வேண்டியிருக்கின்றது காலம் போதாது எதிர்காலத்தில் முஸ்லிம் சமுகத்தின் நலன் கருதி உங்கள் போன்ற போக்கிரித்தனமான அரசியல்வாதிகள் பற்றி பேசுவேன் என்னும் நம்பிக்கையோடு முடிக்கிறேன்.

5 comments:

  1. மிகவும் அச்சொட்டாக சேகு தவுத்தின் உண்மையான அரசியல் பயணத்தை மக்கள் முன் கொண்டு வந்ததற்கு சப்றின் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி கூற கடைமைப்பட்டுள்ளது. இதை பிரசுரித்த Jaffna Muslim இக்கும் நன்றிகள்.

    சப்றின் அவர்களே, இதே போல், ஹகீம், ஹரீஸ், ஜமீல், பைசல் கசீம், ஹபீஸ் நசீர் போன்றவர்களின் சுயநல அரசியலையும் மக்கள் முன் கொண்டு வர வேண்டும் என தயவாய் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. We dont need muslim party anymore.better to support one od major party like badudeen.acs hameed .

    ReplyDelete
  3. Follow the past muslims politicians way.

    ReplyDelete
  4. நெத்தியடி!

    ReplyDelete
  5. கத்தி இன்றி, இரத்தம் இன்றி, சுத்தமாய் ஒரு தோலுரிப்பு.

    ReplyDelete

Powered by Blogger.