Header Ads



இனவாதம் குறித்து ஜனாதிபதி மைத்திரி, பெரும் மனச்சோர்வில் காணப்படுகின்றார் - அர்ஜுன ரணதுங்க

நாட்டின் தேவைகளை கருத்திற்கொண்டு தேர்தல் நடத்தப்படுமே ஒழிய அரசியல்வாதிகளை கருத்திற்கொண்டு நடத்தப்படாது என துறைமுகம் மற்றும் கப்பற் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விருப்பு வாக்கு முறைமையை நிக்கி விட்டு பணம் உள்ள, கொள்ளையிடும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு மக்களுக்கு தேவைப்பாடு உள்ளது.  தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமைக்கு சென்றாலே அதனை செயற்படுத்த முடியும்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு சில தரப்பினரே இன்று கூக்குரலிட்டு வருகின்றனர். அத்துடன் பொது தேர்தலுக்கு செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர். எனவே 20வது அரசியலமைப்பை அமுல்படுத்தியதன் பின்னரே பொது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக காணப்படுகின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும். நாட்டின் தேவைகளுக்கே ஒழிய எமது தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்க கூடாது. இன்றுள்ள பழையவர்கள் அவர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு நாடு வீணாகினாலும் பரவாயில்லை என கூறி இனவாதத்தை தூண்டிக்கொண்டு முன்செல்ல முனைகின்றார்கள்.

ஜனாதிபதி புத்திசாலி. இனவாதம் தூண்டப்படுதல் குறித்து அவருக்கு பெரும் மனச்சோர்வில் காணப்படுகின்றார். நாம் அவ்வாறானதொரு நிலைக்கு கொண்டு செல்ல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அல்ல யாருக்கும் இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.