Header Ads



தேர்தலில் போட்டியிட நான் வேட்பு மனு கேட்கவில்லை, அபயாராம விகாரை தேர்தல் அலுவலகமும் அல்ல - மஹிந்த

நாராஹென்பிட்டி அபயாராம விகாரை தேர்தல் அலுவலகம் அல்ல எனவும் அது விகாரை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ, குளியாபிட்டி கட்சி ஆதரவாளர்கள் இன்று மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். அதன்போது அபயாராம குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்னை சந்திக்க மக்கள் தினமும் வருவதால் அபயாராம விகாராதிபதி விகாரையை பயன்படுத்த தனக்கு அனுமதி அளித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ஷிராந்தி மீது குற்றம் சுமத்தப்படும் ´சிரிலிய´ கணக்கு குறித்து நல்லாட்சி அரசாங்கத்திடமே கேள்வி எழுப்ப வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கணக்கில் அரசாங்கத்தின் பணம் இல்லை என்றும் அவ்வாறு வழங்கியிருக்கவும் இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை கட்சிப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நினைக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தான் வேட்பு மனு கேட்கவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

1 comment:

  1. அபயராம ஓர் பவுத்த விகாரை என்பதை நீங்கள் மறந்துவிடாமல் இருந்தால் சரி.

    சிரிலிய கணக்கு விடயமெல்லாம் இருக்கட்டும்.. மகிந்த அவர்களே அது என்ன உங்கள் மனைவியாரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 222222222V என்றுள்ளது..?

    அவர் என்ன 1922ம் ஆண்டில் பிறந்தவரா..? அட! அப்படியென்றால் ஷிராந்தி அவர்களுக்கு வயது 94 வயது. அதாவது உங்களையும் விட ஏறத்தாழ இருபது வயது அதிகமானவர்.

    பரவாயில்லையே.. இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கின்றாரே..?

    ReplyDelete

Powered by Blogger.