Header Ads



"பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, வடக்கு முஸ்லிம்களின் தாயகத்தினை மீட்டிக்கொடுப்பது நிரந்தர தர்மமாகும்"

-அபூ அஸ்ஜத்-

பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு வெளிவரும்  என்று பலர் எதிர்பார்த்து அதற்காக வரிந்த கட்டிக் கொண்டு  நிற்கின்ற வேளையில் அதனையும் கடந்து தமது வாழ்விடங்களை இழந்து தவிக்கும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்விம் சமூகத்தின் கவனம் ஈர்க்கப்பட வேண்டியுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உரிய மறையில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்று பலரது ஆதங்கம் இருந்த போதும் அதற்கான முனைப்பு எடுக்கப்பட்ட போதும்,இலக்கினை அடைந்து கொள்ள முடியாது போனது.இதற்கு தடைகளாக பல காரணிகளை கூறலாம்.

வடக்கில் குறிப்பாக மன்னார்,முல்லைத்தீவு,வவனியா மாவட்டங்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் 1990 இல் வெளியேற்றப்பட்டதுடன்,அண்மைய சமாதான காலத்தினையடுத்து அங்கு மீள்குடியேற விரைந்த போதும் அந்த மீள்குடியேற்றம் அர்த்தமற்றதாகியுள்ளதை காணமுடிகின்றது.

இந்த நிலையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் அன்னளவாக 10 ஆயிரம் குடுமங்பங்கள் வரை  புத்தளத்திலும்,ஏனைய சில மாவட்டங்களிலம் தமது நிரந்தர பதிவினை மேற்கொண்டுள்ள புள்ளி விபரங்களும் காணப்படுகின்றன.இதற்கு மத்தியில் ஏனை ய மக்களை மீள்குடியேற்றம்  செய்யும் பணியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்த போதும்,அதனை இனவாத சிந்தனையுடன் நோக்கும் சக்திகள்.திரிவுபடுத்தி விரிவுபடுத்தி ஊதி வருகின்ற விடயமம் இடம் பெறாமல் இல்லை.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான பொறுப்பினை அமைச்சர் றிசாத் பதியுதீன் மட்டுமே சுமக்க வேண்டும் என்று சிலர் நினைத்தாலும்,இது ஒரு சமூகத்தின் கூட்டு பொறுப்பு என்பதை உணர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சமூக கடமையினை செய்ய வேண்டும் என்றும் பேசுகின்றது எமது காதுகளுக்கு எட்டாமலும் இல்லை.

இன்றைய தமிழ் ஊடகங்கள் இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஒன்று பட்ட கருத்துக்களை கொண்டு ஒரணியில் செயற்படுவது முஸ்லிம்களுக்கு ஒரு ஊடகமில்லாத குறையினை தற்காலிகமாக நிரப்பும் ஒன்றாக இருப்பதையும் நாம் நினைவு  கூற வேண்டும்.இந்த வகையில் சிங்கள ஊடகங்களுக்கு சமாந்தரமாக  ஓரிரு தமிழ் ஊடகங்களை தவிர ஏனைய அனைத்து ஊடங்களும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் சவால்களுக்கு பதிலளிக்கும் சந்தரப்பத்தை உரியவர்களுக்கு வழங்கிவருவதுடன்,தமது ஆசிரிய தலையங்கத்தில் கட்டமிட்டு எழுதிவருகின்றமையினையும் நோக்கமுடிகின்றது.

இது இவ்வாறு இருக்கையில்  இந்த மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்பதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்ட மக்களின் பிரதி நிதியாக நின்று அமைச்சரவையில் முக்கியத்துமிக்க உப குழுவொன்றினை நியமிக்குமாறு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அமைச்சர் ரவி கருநாயக்க தலைமையில்,அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,கபீர் ஹாசிம்,சுவாமி நாதன்,பாட்டளி சம்பிக்க ரணவக்க,றிசாத் பதியுதீன்.அகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,இது தொடர்பிலான  ஆரம்ப கட்ட சந்திப்புக்களும் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.

மக்களது வாக்குகளை பெற்றுக் கொடுக்கு இந்த மக்களுக்கு எதையும் செய்யாமல் செள்கின்றவர்களை காட்டிக் கொடுப்பு செய்வது பெரும் துரோகமாகும்.தனிப்பட்ட அரசியல் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளவும்,இந்த அரசியில் சொகுசு வாழ்க்கையினை அனுபவிப்பதற்காகவும் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதனை செய்கின்ற பிற்போக்குத்தனமான அரசியல் செயற்பாடுகளை மக்கள்  ஒரு போதும் அங்கீகரிக்கமாட்டார்கள் என்பதை சில அரசியல் சாணக்கியர்கள் மறந்து போனதொன்றாக உள்ளது.

தாம் வாழ்ந்த மண் பறிக்கப்படுகின்ற போது அதற்காக போராடாமல் அது பிறபோன பிறகும்,அதனை பறிப்பதற்கு துணைபோன் ஊடகத்துக்கு சாமரம் வீசிக் கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து பேசி வரும் கூலிப் பேச்சுக்கள் எந்த பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

இவ்வாறனதொரு சூழலில் எமது நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைமைகளும்,முன்னால் இன்னால் அமைச்சர்கள்,முன்னால் இன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னால் இன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பிரதி நிதிகள் அனைவரும் ஓரிடத்தில் சங்கமிக்க வேண்டிய காலத்தின் தேவையெழுந்துள்ளது.பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற பழமொழி இருக்கின்றது.அதனை செய்ய முன்வருவது யார் என்ற  கேள்வி எழுலாம்.இந்த சந்தரப்பத்தில் அந்த மணியினை கட்ட பொருத்தமானவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்றால் அது மிகையாகாது.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதை விட வடக்கு முஸ்லிம்களின் தாயகத்தினை மீட்டிக்கொடுப்பது 5 வருட பாராளுமன்ற காலத்தினைவிட ஆயுள் வரையும்,அதன் பின்னரும் கிடைக்கும் நிரந்தர தர்மமாகும் என்பதை நாம் புரிந்து கொண்டு இந்த முயற்சிக்கு கைகொடுப்போம்.

இழப்பொன்று ஒன்று எமக்கு வரும் வரை அதனது வலி தெரியாது,அது வருவதற்கு முன்னர் பிறரிடமிருந்து கற்றுக் கொள்வோம்.

No comments

Powered by Blogger.